யாருடைய இரத்தம் நமக்குள் ஓடுகிறது?

ஒரு முறை மார்ட்டின் லூதர் தன்னுடைய வாழ்க்கையில் மிக பெரிய தோல்வியை அடைந்து மிகவும் வருத்தத்தில் அமர்ந்திருந்தார், அவருடைய மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. “உனக்கு வந்தால் தெரியும்” என அவர் மனைவியிடம் கூறினாராம்.அவருடைய மனைவி மிகவும் புத்திசாலி, கர்த்தர் நல்ல ஞானமான மனைவியை கொடுத்து இருந்தார் .இரண்டாவது நாள் அதே போல் அமர்ந்து இருப்பதை பார்த்த அவரின் மனைவி, அவர் ஊரின் வழக்கத்தின் படி, இறந்த வீட்டிற்கு செல்லும்போது கருப்பு ஆடை அணிந்து செல்வது வழக்கம். எனவே அவருடைய மனைவி கருப்பு ஆடை அணித்து வேதாகமத்தை கையில் எடுத்து கொண்டு கிளம்பினாராம்.

அதனை பார்த்த அவர் “யார் இறந்துவிட்டது “என்று கேட்டாராம். அதற்கு “இயேசு கிறிஸ்து இறந்து விட்டாராம், நமது சபையில் 4 மணிக்கு அடக்க ஆராதனை அதான் போகிறேன்” என்று கூறினாராம் ! அதற்கு “இல்லை, இல்லை இயேசு கிறிஸ்து மரிக்க வில்லை, அவர் உயிருடன் தான் இருக்கின்றார்”என்று கூறினாராம்.
அவர் மனைவி “இல்லை, அது பழைய கதை, சத்தியமாக அவர் மறித்து விட்டார், அதான் போகிறேன் “. என கூறினாராம்.
“ஐயோ இல்லை அவர் மரித்து உயிர்த்து விட்டார், இன்றும் உயிரோடு தான் இருக்கிறார், அவர் இனி மரிக்க போவதில்லை “என்று கூறினாராம்.
“உண்மையாகவா”????? என்று மனைவி கேட்டார். அதற்கு “ஆம் ” என்று பதில் அளித்தார்.
அவர் மனைவி கூறினாராம்
“உயிரோடு தானே உள்ளார் பிறகு ஏன் கன்னத்தில் கைகளை வைத்து அமர்ந்து உள்ளீர்கள்” என கேட்டாராம்.
இதை கேட்டவுடன் அன்றைக்கு கைகளை எடுத்தவர் சாகும் வரை எதற்காகவும் கவலையுடன் அப்படி உட்காரவில்லையாம். யார் ஒருவர் இயேசு கிறிஸ்து உயிரோடு இன்றும் இருக்கின்றார் என உண்மையாய் நம்பிக்கை கொண்டு இருக்கிறாரோ அவரும் பயமும்  கண்டிப்பாக ஒன்றாக இருக்கவே முடியாது !
தைரியமாக இருப்பீர்கள்!
ஏனெனில் நமக்குள் அவருடைய இரத்தம் ஓடுகின்றது!
அவருடைய பிள்ளைகள் நாம் எதற்கும் பயப்பட தேவை இல்லை.

Author: Sis. Meena Juliet

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE