தனியாக படகு சவாரி செய்த இளவரசனுக்கு ஏற்பட்ட நிலைமை!

ஒரு ராஜா தன் மகன் ஆசைப்படுகிறான் என்று படகுசவாரி செய்ய ஒரு ஆற்றுக்கு அழைத்துச்சென்றான். அவர்கள் கூடவே அமைச்சர்கள் மந்திரிமார்கள் சேவகர்கள் என பலரும் சென்றனர். படகில் தன் மகனை ஏற்றிவிட்டு ராஜா வெளியவே நின்றுகொண்டார். மகன் எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜா செல்வதற்கு விருப்பமில்லை என்று சவாரிசெய்ய மறுத்துவிட்டார். மகன் ஏறியிருந்த படகு நகர ஆரம்பித்தது. சில நிமிடத்துக்குள்ளேயே ஒரு பயங்கர காற்று ஏற்பட, படகு அங்கும் இங்கும் சாயத்துவங்கியது. மகன் பயத்தில் அலறினான். அதை பார்த்த ராஜா உடனே தண்ணீருக்குள் குதித்துப்போய் அந்த படகை இழுத்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தார். எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி.

உடனே பொறுக்கமுடியாமல் அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டாராம்,”நீர் ஒரு ராஜாவாயிருக்க, ஆற்றில் குதித்து காப்பாற்ற ஒரு சேவகரையோ அல்லது மந்திரி அல்லது ஒரு அமைச்சரையோ கட்டளையிட்டிருக்கலாம் அல்லவா” என்று. அதை கேட்ட ராஜா சொன்னாராம்,”வேறுயாரோவென்றால் யாரையாவது அனுப்பி காப்பாற்றச்சொல்லி கட்டளையிட்டிருப்பேன், ஆனால் அங்கே தவித்ததோ என்னுடைய மகன். அவன் ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கும்போது என்னுடைய உயிர் எனக்கு பெரிதாக தெரியவில்லை” என்று. இன்றயைக் காலக்கட்டத்தில் எத்தனைபேர் தம் உயிரை கொடுத்து நமக்கு உதவிசெய்வார்கள்? பேச்சில் பலபேர் சொல்வார்கள், உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று. ஆனால் அந்த வார்த்தையைச்சொல்லி அதை நிறைவேற்றினவர் நம் தகப்பன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே. நாம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திராசுவிகாரத்தின் ஆவியை பெற்றிருக்கிறோம் என்பது எவ்வளவு மேன்மையான ஒன்று இந்த உலகத்தில்!

நாம் நம்முடைய வாழ்க்கையின் பாதையில் செல்லும்போது, பாவம் என்ற காற்று நம்மேல் அடித்து நம்மை அழிக்க போகின்ற நேரத்தில், ஆண்டவர் தம் ஒரேபேறான குமாரனை நமக்காக தந்தருளி, நம்மை பாவத்திலிருந்து மீட்டுஎடுத்து, இரத்தம் சிந்தி இவ்வளவாய் நம்மேல் அன்புக்கூர்ந்தார். அந்த தகப்பனின் அன்பிற்கு இணையானது இவ்வுலகத்தில் ஏதுமில்லை. அவ்வளவு அன்புகூர்ந்த நம் இயேசுவை நாம் எவ்வளவாய் அன்புகூரவேண்டும் என்று நம்மையே கேள்விகேட்டுக் கொள்வோம். இயேசுவை நேசிப்பதில் நாம் குறைவுபட்டிருந்தால், குறைவுகளை மாற்றிக்கொள்வோமாக!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE