இளவரசனை ராஜா திகிலடையச்செய்த காரியத்தை பாருங்க!

ஒரு ராஜா தன் மகனான அந்த நாட்டு இளவரசனை தைரியமுள்ளவனாக்க வேண்டும் என்று ஒரு மாலை நேரத்தில் காட்டிற்குள் கூட்டிக்கொண்டுபோனார். ஒரு மரத்தடியில் இளவரசனை விட்டுவிட்டு, அவர் கண்களை கடினமான துணியினால் கட்டிவிட்டு, இன்று இரவு முழுவதும் நீ தனியாக இங்கே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு ராஜா சென்றுவிட்டாராம். முதலில் தைரியத்தோடு காணப்பட்ட இளவரசன், என்னால் கண்டிப்பாக இங்கே இருக்கமுடியும் என்று சத்தமாய் கத்தினார். அதைக்கேட்ட ராஜா அங்கிருந்து சென்றுவிட்டார் என்பதை அறிந்த இளவரசன் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நேரம் செல்ல செல்ல இருட்ட ஆரம்பித்தது. சில மணி நேரங்கள் சென்றபின்பு தைரியமாக இருந்த இளவரசன் பலவிதமான சத்தங்களை கேட்கத்துவங்கினார். அந்த சத்தம் காட்டு மிருகங்களிடமிருந்து வருகின்றது என்பதை அறிந்த இளவரசனுக்கு பயம் தொற்றியது.

பயத்தில் கத்தத்தொடங்கினார் அப்பா அப்பா என்று. ஆனால் அங்கே உதவிசெய்ய யாரும் இல்லாததை புரிந்துக்கொண்ட இளவரசர், தகப்பன் மேல் பயங்கர கோபத்துடன் அழுதுக்கொண்டே எப்பொழுது வேண்டுமானாலும் மிருகங்கள் நம்மை கொன்று சாப்பிட்டுவிடலாம் ஆனாலும் தைரியமாகயிருக்கவேண்டும் என்று எண்ணி மனதை திடப்படுத்திக்கொண்டு, ஒருவிதமான பயத்தோடு அங்கே இருந்தார். அதிகாலை நேரத்தில் கண் அசந்துத் தூங்கிவிட்டநிலையில், சூரியன் கண்ணில் பட்டு விழித்துக்கொண்ட இளவரசர், கண்களை திறந்து பார்க்கும்பொழுது அவர் தகப்பனான அந்த ராஜா எதிரே உட்கார்ந்திருந்தார். தகப்பனை பார்த்தவுடன் ஆதங்கத்தில் கோபத்தோடு ஏக்கத்தோடு தகப்பனை கட்டியணைத்துக்கொண்டு கேட்டாராம்,”ஏன் என்னை விட்டு சென்றீர்கள்? எனக்கு எவ்வளவு பயமாக இருந்தது தெரியுமா என்று”. அதை கேட்ட தகப்பனான ராஜா சிரித்துக்கொண்டே சொன்னார்,”நான் எங்கேயும் செல்ல வில்லை, உன்னை எப்படி என்னால் இப்படி ஒரு ஆபத்தில் விட்டுவிட்டு செல்ல முடியும்? உனக்கு எதிரே தான் அமர்ந்திருந்தேன் என்று”. உடனே இளவரசன் கேட்டாராம்,”நான் எத்தனைமுறை பயத்தில் அலறினேன் கத்தினேன், நீங்கள் ஏன் சொல்லவில்லை நான் இங்கே தான் இருக்கின்றேன் என்று?”. அதற்கு ராஜா சொன்னாராம்,”நான் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டால் உனக்கு பயம் போய்விடும், ஆனால் அந்த பயத்தை அதாவது அந்த ஆபத்தை நீ தனியாக சந்திக்கும்போது தான் உனக்குள் ராஜாவுக்கேற்ற அந்த தைரியம் வரும் என்று அமைதியாக இருந்தேன்” என்று சொன்னாராம்.

வேதத்தில் வாசிக்கின்றோம்,”நம்மை காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” என்று. சிலநேரம் சில ஆபத்துகளில் சிக்கியிருக்கும்பொழுது, எவ்வளவு ஜெபித்தாலும் பதில் கிடைக்காமல், ஆண்டவர் அமைதியாக இருப்பதுபோல் இருக்கும். ஆண்டவர் கைவிட்டாரோ என்ற கேள்விகள் மனதிற்குள் எழும் நேரங்கள் கூட ஏற்படும். ஆனால் தேவன் பதில் அளிக்கவில்லையென்றாலும் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை. “இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன், ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்” என்று வேதத்தில் பார்க்கின்றோம். அவர் கைவிட்டதுபோல தெரிந்தாலும், அதற்கு ஒரு நோக்கம் உண்டு ஆனால் அவர் நம்மை கைவிட்டுவிட்டு தூரமாய் சென்றுவிடுகிற தேவன் அல்ல. மாறாக உருக்கமான இரக்கங்களால் நம்மை அனைத்துக்கொள்ளுகிற தேவன்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE