இப்படி சார்ஜ் போட்டு பாருங்க…

இப்போது உள்ள காலக்கட்டத்தில் சிறுபிள்ளைகள் முதல் முதியோர் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் உபயோகப்படுத்துகிறார்கள். அழைப்புகளை ஏற்படுத்தி பேசிக்கொண்ட நாட்கள் போய் இப்பொழுது எல்லோரும் அதிலே எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, செய்திகள் கேட்க, பாடல் கேட்க, படங்கள் பார்க்க, விளையாட என. படிக்க தெரியாதவர்கள் முதல் உச்சக்கட்ட படிப்பை படித்துமுடித்த நபர்களும் அதே மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு, பயன்படுத்திக் கொண்டிருக்கிற மொபைல்யை வாங்கி வைத்துவிட்டால் ஒரு சிறுபிள்ளைகூட நம்மிடம் சண்டைக்கு வரும் நாட்களில் இருக்கின்றோம்.

இப்படி நாம் எல்லாரும் பயன்படுத்தும் இந்த மொபைல்யை ஒவ்வொரு நாளும் அதற்கேற்ற அளவு சார்ஜ் ஏற்றிவைத்துக்கொள்ளுவது வழக்கம். இல்லையெனில் மொபைல் ஆஃப் ஆகிவிடும். அதற்காக அடிக்கடி மொபைல்யை பார்த்து, சார்ஜ் குறைந்துகொண்டு வந்தால் உடனே சார்ஜ் போட்டுவிடுவோம். நாம் பலக்கரியங்களுக்காக பயன்படுத்தும் மொபைல்யை பார்த்து பார்த்து சார்ஜ் செய்யும்பொழுது, இந்த உலகத்தில் பலக்காரியங்களை சந்திக்கும் நாம், நம்மை எவ்வளவாய் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். உணவு சாப்பிட்டு சரீரத்தை சார்ஜ் செய்துகொள்ளும் நாம், அடிக்கடி நமது மனதையும், இருதயத்தையும் சார்ஜ் செய்துகொள்ளவேண்டும். நம்மில் சிலர் அதை சிந்திப்பது கிடையாது. அதனால்தான் பலநேரங்களில் சோர்ந்துபோய் விடுகிறோம்.

நாம் சாப்பிடும் சத்தான உணவினால் உலகில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடமுடியும். அதேநேரத்தில் நமது இருதயத்தை வேதவார்த்தையினால் ஜெபத்தினால் சார்ஜ் செய்துகொள்ளும்போது மட்டுமே உலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடமுடியும். என்றோ ஒருநாள் வேதம் வாசித்து அதை வைத்துக்கொண்டே உலகத்தில் போராடினால், சிலநேரத்திற்குள்ளாய் சார்ஜ் தீர்ந்துவிடும். சார்ஜ் இல்லாவிட்டால் சோர்வு ஏற்படும், அதிருப்தி ஏற்படும், நம்பிக்கை அற்றுப்போகும், அவிசுவாசம் ஏற்படும். வேதத்தில் பார்க்கின்றோம், “ஆபத்துக்காலத்தில் சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது” என்று. நம்முடைய பெலன் எப்போதும் குன்றிப்போக விடாமல், எப்பொழுதும் அடிக்கடி தேவவார்த்தையினாலும், ஜெபத்தினாலும் சார்ஜ் செய்துகொள்ளுவோம், பிரச்சனைகளை எதிர்த்துநின்று போராடுவோம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE