இந்த ஊட்டச்சத்து குறைபாடு நமக்கு ஆபத்தானதா?

நாம் தினமும் சாப்பிடுவது, நம் வீட்டில் உள்ள அனைவரையும் சாப்பிட கட்டாயப்படுத்துவதுக்கு காரணம் ஒன்றே ஒன்று தான் நம் உடற்வளர்ச்சிக்கும் ஊட்டசத்துக்கும் மட்டுமே. அதில் ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது. ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும்போது சரீரத்தில் உருவாகும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நம் வீட்டு சிறுபிள்ளைகள் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் எப்படியாவது எதையாவது செய்து அவர்களை சாப்பிடவைப்பார்கள் நம் வீட்டு தாய்மார்கள். அதனால் ஊட்டச்சத்து என்பது நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று.

அதேநேரத்தில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணம் என்ன என்று. மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் அரைகுறையான உணவும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்க்கான ஒரு காரணம். நம் உடல்நிலைக்கேற்ற ஊட்டச்சத்து நாம் சரியான முழுமையான உணவை உட்கொள்ளும்போது நமக்கு கிடைக்கின்றது. எங்கேயுமே அரைகுறையானது நமக்கு பிரச்னையை தான் கொடுக்கும். அதை அறிந்த நம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொன்னார்கள்,” குறைகுடம் கூத்தாடும்” என்று. முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்ட குடத்தை சுமந்துகொண்டு வரும்போது தண்ணீர் வெளியே சிந்தாது, ஆனால் பாதியளவு நிரப்பப்பட்ட குடம் தண்ணீரை வெளியே சிந்தும்.

நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியாக நிலைத்திருக்க நமக்கு தெரியவேண்டியது முழுமையான சத்தியம். விசுவாசப்பாதையில் நாம் தடுமாறும்பொழுது நம்மை தூக்கி நிறுத்த முழுமையான போஷாக்கு அவசியம். சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என வேதத்தில் பார்க்கின்றோம். சத்தியத்தை அரைகுறையாக தெரிந்திருந்தால் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் மற்றும் வாழ்க்கையின் பாதையில் வரும் துன்பங்களில் தள்ளாடவேண்டிய நிலைமைகள் ஏற்படும். சத்தியத்தை முழுமையாய் அறிவதில் ஏற்படும் குறைபாடு நமக்கு மிகவும் ஆபத்தானது. சத்தியம் கிடைக்கும் சபைக்கு போங்கள், போகிற சபைக்கு தொடர்ந்துபோய் சத்தியத்தை முழுமையாய் பிடித்துக்கொள்ளுங்கள், அது உங்கள் வாழ்க்கையில் கிரியைசெய்யும் எல்லா சூழ்நிலையிலும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE