பந்தயத்தில் ஆமை வெற்றிபெற்றபின் நடந்த சுவாரசியத்த பாருங்களேன்!

நம் சிறுவயதில் இருந்து இந்த கதை கேட்டிருக்கிறோம். ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஆமை நிச்சயமாக தோற்றுவிடும் என்று எண்ணி முயலானது வேகமாக ஓடி ஒரு மரத்தின் அடியில் போய் நன்றாக தூங்கியெழுந்து மறுபடியும் ஓடத்துவங்கியது. எல்லைகோட்டை அடைந்தவுடன்தான் முயலுக்கு தெரிந்தது ஏற்கனவே ஆமை எல்லைக்கோட்டைத் தாண்டி வெற்றிபெற்றுவிட்டது என்று. அதற்கு அப்புறம் அங்கே என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? நடந்தது ஒரு சுவாரசியமான காரியம். ஆமை வெற்றிபெற்றதை கேட்டவுடன் முயலுக்கு பயங்கர கோபம். நான் தூங்கவில்லையென்றால் ஜெயித்திருப்பேன் என்றும், என்னைவிட ஆமை வேகமாக ஓடவே முடியாது எனவும் சண்டைபோட்டது. அதைக்கேட்டவுடன் அங்கேயிருந்த முயல் கூட்டம் முழுவதும் அந்த முயலுக்கு ஆதரவு கொடுத்தது. சண்டை முற்றிப்போனதால், அதைக்கண்ட ஒரு இள முயலுக்கு மனது சரியாகப்படவேயில்லை. உடனே அந்த முயல் முன்பதாக வந்து சொன்னது, சண்டை வேணாம் மறுபடியும் ஒரு போட்டி வைத்து பார்த்துவிடுவோம் என்று. அனைவரும் அதை ஆமோதித்தனர்.

போட்டியின் குறிப்பிட்ட நாள் வந்தது. முயலும் ஆமையும் போட்டியின் களத்தில் வந்து நின்றனர். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க போட்டி ஆரம்பமானது. முயல் நிற்காமல் சுறுப்பாக வேகமாக எல்லைக்கோட்டை நோக்கி ஓடினது. ஆமையும் யாரையும் பொருட்படுத்தாமல் ஓடினது. ஆனால் குறிப்பிட்ட நேரம் வந்தபோது ஆமை எல்லைக்கோட்டை தொட்டு வெற்றிபெற்றது. அனைவருக்கும் அதிர்ச்சி இது எப்படி நடந்தது என்று. அப்போது தான் தெரிந்தது, எந்த முயல் நமக்குள் பிரச்சனை வேணாம் என்று மறுபடியும் போட்டிவைக்க சொன்னதோ அந்த முயல்தான் ஆமையை தன் தோளில் சுமந்து ஓடி வந்திருக்கின்றது. அதன் மூலம் அங்கே ஆமையின் வெற்றி நிரூபிக்கப்பட்டு அங்கே சமாதானம் உண்டானது. எல்லோரும் சந்தோஷமாய் சென்றனர் அந்த இடத்தில் இருந்து.

“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று வேதத்தில் படிக்கின்றோம். சூழ்நிலை மாறாக இருந்தாலும், சமாதானத்துக்குகேதுவாக இல்லாதிருந்தாலும் நாம் சமாதானமாயிருக்கவேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பு. நாம் வசிக்கும் பகுதியில், நாம் வேலை பார்க்கும் ஸ்தலத்தில், நாம் படிக்கும் எல்லையில் ஆண்டவருடைய நாமம் மகிமைப்படும் அளவில் எல்லாருடனும் சமதமாயிருக்க கடமைப்பட்டிருக்கிறோம். சமாதான தேவனை ஆராதிக்கும் நாம் எச்சூழ்நிலையிலும் எல்லாருடனும் சமாதானமாயிருப்போம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE