அதிகாரியின் முகத்தில் அறைந்த ஒரு சிறுபெண்!

நமக்கு பல் வலி எடுத்தால் உடனே பல் மருத்துவரிடம் போகிறோம். ஒரு இடப்பிரச்சனை என்றால் ஒரு வக்கீலை நோக்கி போகின்றோம். இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொருநபரை நோக்கி செல்கிறோம். அது தவறா? என்று கேட்டால், தவறில்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் ஒரு சிறு தலைவலி என்றால் உடனே ஒரு மாத்திரை சாப்பிடுவதும், அல்லது உடனே மருத்துவரை அணுகுவதற்கும் முயல்கின்றோம். சிலகாரியங்கள் நாம் வீட்டிலிருந்தே சரிசெய்துவிடலாம்.

ஜெனி என்ற அழகான மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு குட்டி சிறுமி. அவள் படிக்கும் பள்ளியில் அன்று அந்த பள்ளியை ஆய்வு செய்ய வெளியில் இருந்து சில அதிகாரிகள் வந்திருந்தனர். அதிலே ஒரு அதிகாரி தான் ஜான் ஜோஷுவா. அவர் ஆண்டவரை உண்மையாய் பின்பற்றும் ஒரு நேர்மையான அதிகாரி. ஆனால் அவருடைய மகனுக்கு, அவர்கள் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்காமல் சில பெரிய நபர்களை சந்திக்கநேரிட்டது. ஆனால் அவர்களோ காலதாமதங்கள் ஏற்படுத்த, ஜான் மிகவும் சோர்வோடும் ஒருவிதமான ஆதங்கத்தோடும் காணப்பட்டார். அன்றைக்கு அந்த ஆய்வு பணியில் தற்செயலாக ஜெனியின் வகுப்பிற்கு செல்ல நேரிட்டது. உள்ளே சென்ற அவருக்கு அக்குழந்தைகள் அனைவரும் மரியாதையோடு வரவேற்றனர். மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், குழந்தைகளிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். எல்லாரும் உற்சாகத்தோடு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் ஜெனி சோகமாக அமைதியாக உட்கார்ந்திருப்பதை கவனித்தார். என்ன என்று விசாரித்த ஜான், அவளுக்கு உடல்நிலை சரியில்லாததை தெரிந்துகொண்டவர், ஜெனியை அழைத்து சொன்னார்,”உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு போயிருக்கலாமே” என்று. உடனே ஜெனி சொன்னாள், “இல்லை சார், என் சிறுவர் பள்ளி ஆசிரியர் சொன்னார், இதுபோல் காரியங்கள் ஏற்படும்பொழுது இயேசப்பாவிடம் ஜெபிக்கவேண்டும் மற்றவர்களை பார்க்கபோவதற்கு முன் என்று. அதனால் நான் ஜெபித்திருக்கிறேன் சரியாகிவிடும்” என்று.

ஒரு சிறு பெண் ஜானின் முகத்தில் ஓங்கி அறைந்தாற்போல் இருந்தது ஜானிற்கு. ஒரு சிறுகுழந்தைக்கு தெரிந்திருக்கிறது மருத்துவரை பார்க்கபோவதற்குமுன் இயேசுவை பார்க்கவேண்டும் என்று, ஆனால் எனக்கோ என் மகனின் காரியத்தில் அது தோன்றவில்லையே என்று மனம்வலித்தவராய் அங்கே இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். நாமும் எவ்வளவு வருட விசுவாசிகளாய் இருந்தாலும், பலநேரத்தில் ஆண்டவரை நோக்குவதற்குப்பதில் மற்றவர்களை நோக்குகிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. சிறிய தலைவலியா அல்லது பெரிய கல்லூரியின் காரியங்களோ எதுவாக இருந்தாலும், ஆண்டவரால் கூடாதக்காரியம் எதுவுமில்லை என்று வேதத்தில் வாசிக்கின்றோம். ஆதலால் நாமும் நம் சூழ்நிலைகளில் இயேசுவை நோக்கும் போது அவர் நமக்கு வழிகளைக் காட்டுவார், அற்புதங்கள் செய்வார்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE