இந்த கல்லை உருட்டுவதினால் கிடைக்கும் நன்மைகள் இவைகளே!!

ஒரு பெரிய கல்லை உருட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உதாரணத்திற்கு உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பெரிய கல் ஒன்று கிடக்கிறது. நீங்களும் அதை உருட்டிவிட பார்க்கிறீர்கள். ஆனால் அதை உருட்ட இயலவில்லை. பலநாள்கள் போராடுகிறீர்கள் அந்த கல்லோடு, ஆனாலும் அப்படியே தான் நிற்கிறது அந்த கல். பலமாதங்கள் ஆகின்றது, சில வருடங்கள் கூட ஆகின்றது. கல் நகற்றப்பட்டதோ இல்லையோ, ஒவ்வொரு முறையும் அந்த கல்லை உருட்டப் பிரயாசப்படும்பொழுது உங்களை அறியாமல் உங்கள் உடலில் உள்ள அணைத்து தசைகளும் இறுக்கமாகும், நரம்புகள் வலுவடையும் என்பது தான் உண்மை. வெளியே பார்ப்பதற்கு ஒன்றும் ஆகாததுபோல் காணப்படும் ஆனால் உள்ளுக்குள் திடகாத்திரமாய் ஆகியிருப்பீர்கள்.

இதைபோலதான் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பிரச்னைகளோடும் போராட்டங்களோடும் தோல்விகளோடும் நிந்தனைகளோடும் ஜெபத்தில் ஆண்டவரிடம் போராடிக்கொண்டிருப்பதுபோல் தோன்றும். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் விசுவாசத்தோடு ஜெபித்து அதை சந்திக்கும்போது வெளியே ஏதும் நடவாததுபோல் காணப்படும். ஆனால் உண்மையென்னவென்றால், ஒவ்வொரு சூழிநிலையும் சந்திக்கும்பொழுது நம்மை அறியாமல் நம் மனதிற்குள் ஆண்டவர்மேலுள்ள விசுவாசம் பெலத்து கொண்டேயிருக்கும் என்பது தான் உண்மை. அப்படியாக ஏற்படுகிற சூழ்நிலைகளின்நிமித்தமாக இருதயத்தின் விசுவாசம் பலப்படும் உறுதிப்படும்.

வேதத்தில் தாவீது சொல்கிறார், “வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்துக்குப் பழக்குவிக்கிறார்” என்று. இந்த சின்ன சின்ன சூழ்நிலைகளின் மத்தியில் பெலப்படும் நமது விசுவாசம், பெரிய பெரிய காரியங்களை சந்திக்கும்பொழுது கிரியை செய்யும். ஆண்டவர் நம் வாழ்க்கையில் ஏற்படப்போகும் யுத்தங்களுக்கு, அந்த யுத்தத்தை சந்திக்க ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சூழ்நிலைகளின் மத்தியில் நம்மை பழக்குவித்துக்கொண்டிருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE