சாப்பாட்டிற்குள் சிக்கிய கல்! நடக்கப்போவது என்ன?

விதவிதமாக சாப்பிடுவது என்பது பலருக்கு பொழுதுபோக்கு, மேலும் விருப்பமும் கூட. நம் முன்னால் நமக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு வைக்கப்பட்டிருக்கின்றது. அருமையான சுவையின் வாசம் எழும்ப சாப்பிடுவதற்கு நம்மை தயார்படுத்தி, அதை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கின்றோம். சுவையும் வாசனையும் அருமையோ அருமையாக இருக்கின்றது. மறுபடியும் மறுபடியும் வாயில் எடுத்துவைக்க நம்மை உந்துகின்றது. அப்படியாக சுவைத்து மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு சத்தம் வாய்க்குள். அந்த உணவை கடிக்கும்பொழுது அதற்குள் ஒரு கல் இருந்து அதை கடித்துவிட்டோம். இப்போது என்ன நடக்கும்?

மிகவும் அருமையான உணவு என்று வீண் பண்ணாமல் மறுபடியும் அந்த கல்லை கடித்து மென்று உணவோடு முழுங்கிவிடுவோமா? அல்லது வாயில் இருக்கும் உணவை அப்படியே வெளியே துப்பிவிடுவோமா? உண்மையென்னவென்றால், சிலநேரம் துப்பிவிடுவோம் ஆனால் பலநேரம், கடிப்பதை நிறுத்திவிட்டு நமக்குளிருக்கும் நாக்கின் உதவியோடு அந்த கல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை மட்டும் நாசுக்காக வெளியேக்கொண்டுவந்து துப்பிவிட்டு, பின் மென்று சாப்பிட்டு விழுங்குவோம்.

தேவன் ஏற்படுத்தின அழகான குடும்பம், அற்புதமான நிம்மதியான ஆசீர்வாதங்கள் நிறைந்த இடம். ஆனால் பலநேரம் குடும்பவாழ்க்கையில் கணவன் மனைவிக்குள், பெற்றோர் பிள்ளைகளுக்குள் ஏதோ ஒரு கல் காணப்படுகின்றது. அதுவே சண்டைகள், பிரிவினைகள், விவாகரத்துகள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஏற்பட காரணமாகின்றன. இதெற்கெல்லாம் காரணமான அந்த கல்லை கண்டுபிடித்து நாசுக்காக உறவுகளுக்குள் இருந்து வெளியே தள்ளிவிட்டு, நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம். வேதம் சொல்கிறது,”புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” என்று. இது குடும்பத்திலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்திலிருக்கும் அனைவர்க்கும் பொருந்தும் வசனமே. உறவுகளை கசக்கப்பண்ணும் அந்த கல்லை புத்தியுள்ளவர்களாயிருந்து அதை தூக்கியெறிவதை விட்டுவிட்டு குடும்பத்தை பிரிக்கும் புத்தியில்லாதவர்களாயிருக்கவேண்டாம். உறவுகளுக்குள் சண்டையை கொண்டுவரும் அந்த கல்லை தூக்கியெறிந்து புத்தியுள்ளவர்களாயிருந்து குடும்பத்தின் சமாதானத்தைக் காத்துக்கொள்வோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE