வேதாகமத்தில் பேரீச்சை மரம்

ஜீன் 2006ல் இஸ்ரேலின் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் 2000 வருடத்துக்கு முந்திய பேரீச்சைமர விதையை முளைக்க வைத்தனர். சவக்கடலின் மேற்குக்கரையிலுள்ள மசடா என்னும் ஏரோதுவின் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விதைக்கு வேதாகமத்தின் மிக மூத்த வயதுள்ளவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள (ஆதியாகமம் 5:27) சாதனையாளர் “மெத்துசாலா”வின் பெயர் வைக்கப்பட்டது. பலகாலம் தூங்கியிருந்த இவ்விதையை விழித்தெழ வைக்கும் சாதனையுடன் நிழல், உணவு, அழகு மற்றும் மருத்துவ குணங்களுக்காக வேதாகமத்தில் புகழப்பட்டுள்ள இந்த மரத்தைப்பற்றி அதிகம் அறிந்து கொள்ள விரும்பினர்.

வேதாகமத்தில் பேரீச்ச மரங்களுக்கு முக்கிய பங்குண்டு. பழைய ஏற்பாட்டில் இது தேவாலயத்திற்கும் தேவனுடைய பிரசன்னத்திற்கும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு இயேசு எருசலேமுக்குள் ஒரு கழுதையின் மேல் பவனியாக நுழைந்த போது மகிழ்ச்சியடைந்த ஒரு கூட்டம் குருத்தோலைகளை கிறிஸ்துவின் காலிகளுக்குக் கீழே விரித்ததை விவரிக்கிறது.

ஆபிரகாமின் வழித்தோன்றல் ஒருவர் மூலம் உலகமே ஆசீர்வதிக்கப்படும் என்ற வாக்குத்தத்தமுன் கூட 2000 ஆண்டுகளாக முளைக்காமல் உறங்கிக் கொண்டிருந்தது (ஆதியாகமம் 12:1-3 பார்க்க). இறுதியாக, வாக்குத்தத்தத்தின் விதை முளைத்தது. அந்த விதை தான் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்து. சீக்கிரமே, உயிர்த்தெழுந்த அவரது வரலாறு உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

அந்த அற்புதத்தை நாமும் இப்போது அனுபவிக்காலம். காலம் ஒரு தடையல்ல, சூழ்நிலையென்னும் தரிசு நிலமும் ஒரு பிரச்சனையல்ல. நம் இருதயத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது அது ஒரு நிலமாக மாற அனுமதிப்பதுவே முக்கியமானது.

“நீதிமான் பனையைப் போல் செழித்து…. முதிர்வயதிலும் கனி தந்து, புஸ்டியும் பசுமையாயிருப்பார்கள்”. (சங்கீதம் 92:12, 15)

(Visited 112 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE