ஆதாமும் சுண்டெலியும்

மரம்வெட்டி ஒருவன் தினமும் மரம் வெட்டிக்கொண்டே ஆதாமைத்திட்டிக் கொண்டிருப்பான். “ஆதாமினால் தான் இது எனக்கு வந்தது. ஆதாம் ஒழுங்காக ஏதேன் தோட்டத்திலேயே இருந்திருக்கலாமே! அவனது கீழ்ப்படியாமையால் நானும் சாபத்திற்குள்ளாகி, இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதிருக்கிறது’ என்பான்.
இவன் ஆதாமை ஒவ்வொரு நாளும் வசைபாடுவதை அந்த வழியாய்ச் செல்லும் ஒரு போதகர் கேட்டுக் கொண்டேவந்தார். ஒருநாள் அவர் ஒரு சிறு பொட்டலத்தை அந்த மரவெட்டியிடம் கொடுத்து, “இதை நான் வரும்வரை வைத்திரு, திறக்காதே பத்திரமாய்ப் பார்த்துக்கொண்டால் உனக்கு நூறு ரூபாய் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றர்.
நூறு ரூபய் தனக்குக் கிடைக்கப்போகும் பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தான் விறகுவெட்டி. அப்படியானால் இந்தப் பொட்டலத்தில் ஏதோ மிகவும் விலையேறப்பெற்ற ஒன்று இருக்க வேண்டும். அவனால் ஆவாலை அடக்க முடியவில்லை.
கடைசியில் பொட்டலத்தை மெதுவாய்த் திறந்தான். அவ்வளவுதான் உள்ளேயிருந்த சுண்டெலி குதித்து ஓடியது; வேறு ஒன்றும் உள்ளே இல்லை, மாலையில் போதகர் வந்தார். “ஆதாம் கீழ்ப்படியாதது இருக்கட்டும் நீ எப்படி? நூறு ரூபாய் பரிசை வீணாக இழந்தாயே! என்றார். அன்று முதல் அந்த மரம்வெட்டி ஆதாமைமட்டுமல்ல, மற்றவர்களைக் குறைகூறைவதையும் விட்டுவிட்டான்.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத் 6:14

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE