ஆட்டோ சங்கர்..

ஆட்டோ சங்கர் வேதம் வாசிக்கிறான் என்று ஒரு செய்தியின் தலையங்கத்தைப் பார்த்த உடனேயே அப்பத்திரிக்கையை அநேகர் வாங்கி படித்தனர். அவன் ஒரு மரணத்துக்காகக் காத்திருக்கும் கைதி இவன் எப்படி வேதம் வாசிக்க ஆரம்பித்தான். என்னிடத்தில் வருகிறவனை நான் ஒருபோதும் புறம்பேத் தள்ளுவதில்லை என்று எம்பெருமான் இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறியிருக்கிறார். நீதிமான்களையல்ல பாவிகளை, இரட்சிக்கவே நான் இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறேன் என்றார் உலக இரட்சகர் இயேசு, எனவே இயேசுவின் இரட்சிப்பை ஆட்டோ சங்கருக்கும் தெரிவிக்க வேண்டும், அவனும் அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அடையவேண்டுமென அநேகர் ஆசைப்பட்டனர். முதலில் கிறிஸ்தவர்களை வெறுத்ததால் அவன் அவர்களை பார்க்கவோ, வேதத்திலிருந்து கூறவோ அனுமதிக்கவில்லை. ஆதலால் அவனை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது சில வசனங்களை அவன் காதில் விழும்படி வாசித்தார்கள். ஜீவ வசனங்கள் அவன் இதருயத்தில் நல்ல நிலத்தில் விழுந்த விதையாக விழுந்து வேர் கொண்டது. பலனாக வேதப்புத்தகம் கேட்டான். வாசிக்கலானான். விளக்கம் கேட்டான்.
விளங்கிக் கொண்டான் தேவ சித்தத்தை….
அளித்தான் இருதயத்தை இயேசுவுக்கு.
ஒரே வழி அவர் என்றான்.
ஒட்டிக்கொண்டான் இயேசுவோடு,
வெட்டிக்கொண்டான் உலகத்தை;
மாட்டிக்கொண்டான் இரட்சிப்பின் ஆடையை;
தட்டிச்சென்றான் ஜீவ கிரீடத்தை….
ஆம் எந்த நிலையில் நீ இருந்தாலும் உனக்கு ஒரு வழி உண்டு. எந்த வழியுமே எனக்குப் புலப்படவில்லை என்று ஏங்குகிறாயா? “நானே வழி” என்கிறார் நம் நாதர் இயேசு கிறிஸ்து. அவர் பாதையில் சென்றால் நித்திய மரணமும் அழிவுமில்லை. அவ்வழியில் நமக்கு உதவி செய்து ஜீவ கிரீடத்தைத் தர அவர் ஆவலாகக் காத்து நிற்கிறார். உன் பதில் என்ன்?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE