பட்டை தீட்ட வேண்டும்….

 முட்புதர்களும் காட்டு மரங்களும் அடர்ந்த ஒரு வனப்பகுதியை சரீப்படுத்தி சமநிலமாக மாற்றும் பொறுப்பு ஒருவனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணிக்கான கால கெடுவும் கொடுக்கப்பட்டது. குறித்தகாலம் வருவதற்கு முன்னால் இடத்தைப் பார்வையிட வந்த அதிகாரி இன்னும் கால்பகுதி காடு கூட சரீப்படுத்தப்படவில்லையென்று அறிந்து அவனுக்கு உதவியாக இன்னொருவனை அமர்த்தினார். பழைய ஆளைக்காட்டிலும் இந்த புதிய ஆள் மிக துரிதமாக மரஞ்செடிகளை வெட்டி வீழ்த்தினான். ஆச்சிரியமடைந்த பழைய ஆள் புதியவனிடம் கேட்டான். எப்படி உன்னால் இந்த மரங்களையெல்லாம் எப்படி வெட்டி வீழ்த்த முடிகிறது என்றான். நான் தினமும் காலையில் எழுந்து என் ஆயுதங்களைத் தீட்டிவிட்டு வேலைக்கு வருகிறபடியால் துரிதமாக வேலை முடிகிறது என்றான். அனுபவம் வாய்ந்த பழையவனுக்கு தினமும் ஆயுதங்களைப் பட்டை தீட்ட வேண்டும் என்ற அடிப்படை விவரம் தெரியாததால் தலையை தொங்கப்போட்டான்.
    நாங்கள் பரம்பரை கிறிஸ்துவர்கள். சபை விஷயங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். பின்னர் ஏன் ஜீவியத்தில் ஜெயம் இல்லை. காரணம் ஜெபம் இல்லை. ஜெபம் தான்.  ஒருவனுடைய வாழ்க்கையை பட்டை தீட்டும். கூர்மையான ஆயுதமாக்கும். ஜெபம் இல்லாமல் ஜெயம் இல்லை. பட்டை தீட்டாமல் வைரம் ஜொலிக்காது. ஜெபத்தால் பட்டை
தீட்டப்படாவிட்டால் கிறிஸ்தவ ஜீவியம் ஜொலிக்காது.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE