சோதனையைத் தாங்கிக் கொள்

ஒரு அறையில் கட்டுக்கட்டாய்ப் பழைய வண்ணக் காகிதங்கள் இருந்தன. ஒரு காலத்தில் பளபளப்பாக இருந்து இப்போது தூசி படிந்து பொலிவிழந்து காணப்பட்டாலும் புதிய காகிதங்களாக இருந்த போது தினமும் புரட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது போல் அலைக்கப்படாமல் நிம்மதியாய்க் கட்டப்பட்டு அறைக்குள் அடைந்து கிடப்பது அந்தக் காகிதங்களுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.

பல ஆண்டுகளாய்ப் பூட்டிக்கிடந்த அந்தக் காகித குடோனை ஒரு மனிதர் விலைக்கு வாங்கினார். வாங்கியவருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது . அந்த குடோனின் சொந்தக்காரர் தங்கத்தையும் காகிதம் போலாக்கி நிறம் மாற்றி அந்த குடோனில் உள்ள குப்பைக் காகிதங்களுடன் கலந்து வைத்திருக்கிறார் என்பது தான் அது. அவர் தம்முடைய ஆட்கள் சிலருடைய உதவியுடன் அதிலிருந்த சில காகிதங்களை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தார். அவர்களால் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு தாளாக எடுத்து சோதிக்கப் பல நாட்களாகும் என்பது மிகத் தெளிவாகத் அவர்களுக்குப் புரிந்தது . இந்த விஷயம் வெளியே தெரிந்தாலும் ஏராளமான பிரச்சனைகள் வரும்.

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து அனைத்தையும் எரித்து விட்டால் ? உடனே தம்முடைய எண்ணத்தை செயல்படுத்தும் படி அவற்றையெல்லாம் தம்முடைய செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றார். பல வருடங்கள் கழித்து வெளி உலகத்தைப் பார்ப்பதில் காகிதங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் பழையபடி புரட்டப்படுவோமோ என்ற பயமும் இருந்தது. எல்லாம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டன. இதை அவை எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாக் காகிதங்களும் அலறத் துவங்கிவிட்டன.

“எரியுதே , எரியுதே ” என்று காகிதங்கள் அலறிக் கொண்டே சாம்பலாகின. இடையிடையே சில காகிதங்கள் மட்டும் எரியாமல் , நிறம் மட்டும் மாறிக்கொ ண்டிருந்தன.

“ஐயோ , மற்ற காகிதங்கள் போல நாமும் எரிந்து சாம்பலாகியிருக்கலாமே , வேதனை முடிந்து போயிருக்குமே ” என்று கதறின . ஆனால் கடைசி வரை அவை எரிந்து போகவேயில்லை. காகிதக் குவியல் இப்போது சாம்பல் குவியலாக் கிடந்தது. நெருப்பும் அணைந்திருந்தது . மேலே பூசப்பட்ட பூச்சு , தூசியெல்லாம் நீங்கி அந்தக் காகிதங்கள் மட்டும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன. அவற்றாலேயே தங்களுடைய அழகை நம்ப முடியவில்லை.

உரிமையாளர் , ஒவ்வொரு காகிதத்தையும் பக்குவமாய்த் திரட்டி சுத்தப்படுத்தி அழகாய்த் தம்முடைய பெட்டகத்தில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு காகிதம் சொன்னது ,

“நெருப்பின் வெப்பத்தைக் கடந்து போகாதிருந்திருந்தால் நானும் குப்பையோடு குப்பையாய் அல்லவா கிடந்திருப்பேன் ? இப்போது விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷ அறையில் உயர்வான இடம் கிடைத்ததே ! ” .

நீ காகிதமாய் இருந்திருந்தால் கருகி சாம்பலாகியல்லவா இருப்பாய் ? நீ பொன் என்பதால்தான் இத்தனை சோதனையையும் தாங்கிக் கொள்ள முடிந்தது. இதோ உன் துக்க நாட்கள் முடிந்தன . நீ பொன்னாய் ஜொலிக்கப் போகிறாய்.

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” 1 பேதுரு 1 :7

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE