தேவன் நன்மைகளை தருவார்

சில பிள்ளைகள் துப்பாக்கி போன்ற பொம்மையில் தண்ணீரை நிரப்பி மற்றவர்கள் மேல் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் துப்பாக்கி போன்ற பொம்மை வேண்டும் என்று அழுதான். அவனுடைய தந்தை சாயங்காலம் வாங்கித் தருவதாக வாக்களித்து அவனுடைய அழுகையை நிறுத்தினார். ஆனால் அந்த பொம்மை ஒரு நல்ல விளையாட்டுப் பொருள் அல்ல. அது மற்றாவர்களின் உடைகளை அழுக்காக்கும். தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதால் சளி பிடிக்கலாம். எனவே அதை வாங்காமல் அதைவிட விலை அதிகமானதும், தரமானதுமான ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கி வந்தார். அவனோ தான் கேட்டதை வாங்கித் தரவில்லையே என்ற கோபத்தில் அந்த நல்ல விளையாட்டுப் பொருளைத் தூக்கி வீசிவிட்டான்.

சில நேரங்களில் நாம் பிறர் அனுபவிப்பது போன்ற சில நன்மைகளை நாமும் பெற விரும்பி விசுவாசத்தோடு ஜெபிப்போம். ஆனால் நம்மை நேசிக்கும் தேவனுடைய பார்வையில் நாம் கேட்ட நன்மை நமக்கு உண்மையான நன்மையாயிராது. ஆனால் நாமோ மற்றவர்களுக்கெல்லாம் கிடைத்த நன்மை நமக்கு ஏன் கிடைக்கவில்லை என மனங்கசந்து கொள்வோம்.

ஆம், நாம் கேட்டதை அல்ல, தேவன் தரவிரும்பியதைப் பெறுவதே நமக்கு நல்லது. நாம் கேட்ட விதமான படிப்பு, வேலை, வாழ்க்கைத்துணைக் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவைகளைவிட அதிக மேன்மையானவைகளைக் கர்த்தர் நமக்காக வைத்துள்ளார். அவைகள் தான் நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.சங்கீதம் 85:12

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE