வெள்ளத்தில் குதித்த வாலிபன்

ஒருமுறை ஒரு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. வரும் வழியில் உள்ள மரங்கள், பலகைகள், ஆடு, மாடுகள் என பலவற்றையும் இழுத்துக்கொண்டு சென்றது. தண்ணீரில் மிதந்து செல்லும் பல பொருட்களை கண்டதும் அவை என்ன என தெரியாமல் அவற்றை எடுக்க ஆசை கொண்டான் ஒரு வாலிபன். நேராக வெள்ளத்தில் குதித்து, மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய பொருளை நோக்கி நீந்தி அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கரைக்கு இழுக்க ஆரம்பித்தான். ஆனால், அந்தோ பரிதாபம்! அவன் பிடித்தது வேறு எதுவுமல்ல அது ஒரு கரடி. அந்தக் கரடி உடனேயே அவனைப் பிடித்துக் கொண்டது. இவன் அதை இழுக்க, அது இவனை இழுக்க பரிதாபமாக தண்ணீரில் முழ்கி மரித்தான்.
இப்படித்தான் இன்றைக்கு அநேகர் தேவையில்லாதவைகளை பணத்தை, நகையை, மாயையானவைகளை, தனக்கு சொந்தமில்லாதவைகளை, தன் தகுதிக்கு மிஞ்சியதை, எல்லாவற்றிற்கும் மேலாய் கர்த்தருக்கு பிரியமில்லாதவற்றை இச்சித்து தோல்விகளைத் தழுவ காரணமாகி விடுகின்றனர். குடும்பத்தில் தனிப்பட்ட நபரின் இச்சை முழுக்குடும்பத்தின் தோல்விக்கும் காரணமாகி விடுகிறது. யாக்.1:15ல் “இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும் என்று பார்க்கிறோம்.
இச்சைதான் பாவத்திற்கு அடித்தளம் இடுகிறது. காரணமாகி விடுகிறது. நீங்கள் இச்சையில் ஆரம்பித்து பாவத்தில் முடிக்கும் எந்தச் செயலும் உங்கள் குடும்பம் அல்லது உங்களை சார்ந்தவரின் தோல்விக்கு காரணமாகுமே. சிந்தித்ததுண்டோ? தோல்விக்கு காரணமானவரா நீங்கள் என இன்றே யோசித்துப் பாருங்கள். மனந்திரும்புங்கள் தோல்வியை ஜெயமாய் மாறப்பண்ணுவார். வெற்றிக்கு காரணமானவராய் உங்களை மாறச்செய்யும் வல்லமை நம் இயேசுவுக்கு உண்டு என்பதை மறந்து போக வேண்டாம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE