கலர் காகிதம்

ஒரு விதவைத்தாய் தன் மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். அவனுக்கு வெளி நாட்டில் வேளையும் கிடைத்தது. மகனை ஆசையோடு அனுப்பிவிட்டு, இனி என் மகன் தனக்கு எல்லாம் செய்வான் எனக்கு கவலையில்லை” என்று இருந்தாள். மாதங்கள் கடந்தன. இவள் வறுமை நிலையோ மாறவில்லை.
தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். ஒருமுறை இவள் உறவினர் ஒருவர் வந்து இவளிடம் அவள் மகனைக் குறித்து விசாரித்து விட்டு” உன் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்தும், கை நிறைய சம்பாதித்தும் உனக்கென ஒன்றும்  அனுப்பிவைக்கவில்லையா, உன் கஷ்டம் போக்க ஒரு முயற்சியும் செய்யவில்லையா?” என்று அங்கலாய்த்தாராம். அந்த படிப்பறிவில்லா தாயும் அவரிடம் ” மாதம் ஒருமுறை என் மகன் ஏதோ ஒரு கலர் காகிதம் அனுப்புவான். அதை மட்டும் நான் பத்திரப்படித்தி வைத்திருக்கிறேன்” என்று கூறி அவரிடம் எடுத்துக் காண்பித்தாளாம். பார்த்தவுடன் உறவினர் அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த தாயிடம் ” இவையெல்லாம் கலர் காகிதம் (cheque) அல்ல. நீ கஷ்டப்படக்கூடாது என உன் மகன் பணம் அனுப்பியிருக்கிறான்” என்று விளக்கிக் கூறினாராம். அதன்பின் தான் அந்தத் தாய்க்கு அதன் மதிப்புப்புரிந்தது.
       நண்பர்களே! கர்த்தரின் வார்த்தை அடங்கிய வேதம் நம் கரத்தில் இருக்கிறது. ஆனால்  நம்முடைய வேதம் விலையேறப்பெற்றது என்பதை மறந்து விடுகிறோம். விலையேறப்பெற்ற அந்த வார்த்தைக்கு ஈடு இணை ஏதுமில்லை.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE