நீங்கள் யாருக்குப் பைத்தியம்?

ஒரு பட்டணத்தில் வசித்த ஒரு சகோதரன் தன் ஆண்டவருக்கு சாட்சி பகரும் பொருட்டு தன் மேலாடையின் முன்னும் பின்னும் வசன அட்டைகளை தொங்கவிட்டு வீதிகளில் செல்வாராம். இதினிமித்தமாய் அந்தப் பட்டணத்தின் பல இடங்களிலும் இவர் கேலிக்குரியவராய் மாறிவிட்டார். வேடிக்கை பொருளாகி விட்டார். சில வருடங்களுக்குப் பிறகு, வசனங்களுக்குப் பதில் தன் ஆடையின் முன்பகுதியில் “நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்” என்ற வாக்கியத்தையும் தன் முதுகுப்புறத்திலோ “நீங்கள் யாருக்குப் பைத்தியம்?”
என்ற வாசகத்தையும் எழுதியிருந்தாராம். இப்பொழுது இந்தக் கேள்வி மற்றவர்களுக்கு வேடிக்கையாக அல்ல; சிந்திக்கச் செய்வதாய் மாறிவிட்டது.

இன்றைக்கு அநேகர் சினிமாவுக்கு பைத்தியமாய், டி.வி. நாடகங்களுக்கு, சினிமா நட்சத்திரங்களுக்கு பைத்தியமாய் அலைகிறார்கள். இன்னும் சிலர் அரசியலுக்கு பைத்தியமாய் இருக்கிறார்கள். இன்னும் ஒரு கூட்டம் கிரிக்கெட் வீரர்களுக்கும், விளையாட்டுக்கும் பைத்தியமாய் நேரத்தை செலவுபண்ணி வீணடிக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்கு பைத்தியமாய் இருக்க விருப்பமுமில்லை. இருப்போரைப் பார்த்து கேலி செய்ய தாமதிப்பதுமில்லை.

கிறிஸ்துவுக்குப் பைத்தியமாய் இருக்க விருப்பமில்லையெனில் உலகத்துக்குப் பைத்தியமாயிருக்கிறீர்கள். அதாவது பிசாசுக்கு பைத்தியமாய் மாறிவிட்டீர்கள் என்றே அர்த்தம். இதை அறிந்ததுண்டா? உணர்ந்ததுண்டா? சிலுவையை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த உலகத்திற்கு மரிக்கும் ஸ்தானத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். உலகத்திற்கு மரித்த அனுபவம் கிறிஸ்துவுக்குப் பைத்தியமாயிருக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

“….நாங்கள் உலகத்துக்கும் … மனுஷருக்கும் வேடிக்கையானோம். நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்.” -1கொரி 4:9,10.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE