ஆபத்து வெள்ளம் வருகிறது..

ஒரு மலைப்பாங்கான பகுதியில் தெய்வ பக்தி நிறைந்த மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனக்கு எந்தவித தீங்கு வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காப்பாற்ற தன் வன் வல்லவர் என்று தன்னுடைய அயலகத்தாரிடம் கூறி வந்தார். அவர் வாழ்ந்து வந்த பகுதியில் அடுத்த 48 மணிநேரத்துக்குள் பெருமழை பெய்யக்கூடும் என்றும், தாழ்வான பகுதியிலுள்ளவர்கள் வேறு இடத்துக்கு உடனே இடம் பெயர வேண்டும் என்றும் அறிவிப்புக் கொடுக்கப்படுவதைக் கேட்டார். மழைபெய்து அவர் வாழ்ந்து வந்த பகுதி வெள்ளத்தால் நிறைந்தது. அரசாங்க அதிகாரிகள் படகுகள் மூலமாக வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். இவருடைய வீட்டுக்கு வந்தபோது, என்தேவன் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி படகில் ஏற மறுத்துவிட்டார். ஆனால் வெள்ளத்தின் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. கடைசியாக ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வந்து இவருடைய வீட்டுக்கு மேலாக வட்டமிட்டு இவரை மீட்பதற்காக கயிறு ஒன்றை
இட்டுக்கொடுத்தது. ஆனால் இந்த விசுவாசியோ, தேவன் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி அந்த கயிறை பிடிக்க மறுத்துவிட்டார். கடைசியாக வெள்ளம் அதிகமாகி இவர் மரித்துபோனார். பிறகு இவருக்கு தேவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் தேவனிடம் முறையிட ஆரம்பித்தார். ஆண்டவரே நீர் என்னைக் காப்பாற்றுவீர் என்று நான் எவ்வளவு விசுவாசமாயிருந்தேன். என்னைக் கைவிட்டுவிட்டீரே என்று அழுதுகொண்டே கூறினார். ஆண்டவர் அவரைப் பார்த்து என் அருமை பிள்ளையே நாம் உன்னைக் கைவிடவில்லை. நான் உனக்கு மூன்று முறை உதவி செய்ய நினைத்தும் நீ என் உதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.
அநேக வேளைகளில் தேவன் நமக்கு தரும் உதவிகள் பாதுகாப்புகள் நாம் நினைக்கிற விதமாகவே இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் தேவன் நம்மை எந்த விதத்தில் நடத்தினாலும், அவருடைய சித்தமே மேலானது.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE