டேவிட் லிவிங்ஸ்டன்

இந்த உலகத்தின் மாபெரும் மிஷனெரிகளில் ஒருவராக போற்றப்படுகிறவர் டேவிட் லிவிங்ஸ்டன். இருண்ட ஆப்பிரிக்கக் காடுகளுக்குள் தைரியமாக சுவிசேஷ ஒளியோடு சென்று, முதன் முதலில் அங்கு தீபம் ஏற்றியவர்.

அவர் தன்னுடைய பெயரில் மகிழ்ச்சியடைவார். வேதத்தில் உள்ள டேவிட் (தாவீது) சிங்கத்திற்கு அஞ்சாமல் அதன் வாயைப்பிடித்துக் கிழித்தவரல்லவா? அந்தப் பெயரைத் தான் சூடியிருப்பது எவ்வளவு மகிழ்ச்சி. ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள சிங்கத்திற்கும் மட்டும் அல்ல, அப்பாவி மக்களை விழுங்க வகை தேடும் சாத்தானாகிய சிங்கத்திற்க்கும் அவர் பயப்படவில்லை. சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன் என்று அப்.பவுல் சொல்லுவதைப்போல இவரும் பலமுறை சிங்கத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
சோர்வே அடையாத இவரது ஊழியம் எல்லா ஊழியருக்கும் ஒரு சவால். புதிய புதிய மலைகளின் மேல் இந்த பாரத்தோடு ஏறினார். விக்டோரியா நீர் வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர் இவர்தான்.(http://www.youtube.com/watch?v=gg8SEukdFgY)

மனிதனை அடிமையாய் விற்கும் வியாபாரத்திற்கு விரோதமாய் குரல் கொடுத்தவர், வழி தவறிய ஆடுகளை மிகவும் ஜாக்கிரதையோடு இவர் தேடினார்.என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித் திரிகிறது விசாரிக்கிறவனுமில்லை
தேடுகிறவனுமில்லை. எசே.34:6 வழி தவறும் ஆடுகளை, ஆத்தும பாரத்தோடு கரிசனையோடு தேடுபவர்.

ஓர் நாள் அதிகாலை 4 மணிக்கு முழங்காலில் நின்றவாரே அவர் உயிர் மரித்தது. ஆப்பரிக்க தேசத்தின் மக்கள் அவர் இருதயத்தை மட்டும் எடுத்து தங்கள்தேசத்தில் அன்போடு அடக்கம் செய்தனர். மீதி சரீரம் லண்டன் மாநகரில் அடக்கம் செய்யப்பட்டது

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE