விபச்சாரம் என்ற செத்த ஈ.

இந்த வார்த்தையை நாம் இப்போது அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. இன்று இதைக் குறிப்பிட “அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்” என்றோ, “அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறது” என்றோ குறிப்பிடுகிறோம். இவை இரண்டுமே இந்த விபச்சாரத்தையே குறிக்கின்றன. இது அனைவருக்கும் புரியும். விபச்சாரம் என்பது ஒரு செத்த ஈ ஆகும். இது ஏராளமானவர்களுடைய வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் செத்த ஈ உண்டாக்குவது போன்ற ஒரு கெட்ட துர்நாற்றத்தை வேறெந்த ஈயும் உண்டாக்குவதில்லை. விபச்சாரம் என்ற செத்த ஈ அநேகருடைய வாழ்க்கையில் துன்பத்தையும் வேதனையையும் தருகிறது. பல தடவைகளில் குடும்பங்களையும் பிரித்து விவாகரத்தில் கொண்டு விட்டுவிடுகிறது. இது ஒரு கிறிஸ்தவனின் சாட்சி வாழ்க்கையைக் கெடுத்துவிடுகிறது. இதன் மூலம் ஆண்டவருடைய நாமத்துக்கு கனவீனம் உண்டாகிறது.

சீனாய் மலையின்மேல் தேவன் பத்துக் கற்பனைகளை மோசேயிடம் கொடுக்கும்போது, அவற்றில் இரண்டு கற்பனைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் உள்ள பால் உறவைக் குறிப்பனவாயிருந்தன. ஏழாம் கற்பனை கூறுகிறது: “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்று பத்தாம் கற்பனை கூறுகிறது: “பிறர் பொருளை… பிறனுடைய மனைவியின் மேல் ஆசை கொள்ளாதே” (யாத் 20:14,17) என்று இவைகள் தேவன் அருளிய தெளிவான கட்டளைகளாகும்.

விபச்சாரம் எப்பொதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கர்த்தருடைய பார்வையில் விபச்சாரம் எப்போதும் ஒரு பாவமாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இது காட்டப்பட்டாலும், வார, மாத பத்திரிக்கைகளில் இதைப்பற்றி எவ்வளவுதான் சாதாரணமாக, எங்கும் பரவலாக காணப்பட்டாலும், தேவனுடைய பார்வையில் இது ஒரு அருவருக்கத்தக்கப் பாவமே. விபச்சாரம் ஒரு செத்த ஈ என்றும், அது உங்கள் வாழ்க்கையை அசுத்தப்படுத்தி நாறச்செய்துவிடும் என்று தேவன் கூறுகிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE