ஒருவருக்கொருவர் ஒப்புரவாகுங்கள்..

திருச்சபையில் ஒருவருக்கொருவர் மனஸ்தாபமோ, சண்டையோ இருக்கக் கூடாது. சிலவேளைகளில் மனஸ்தாபம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டாலும், ஒருவருக்கொருவர் ஒப்புரவாக வேண்டியது மிகமிக அவசியம். இது நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு சிறந்த சாட்சியாக அமையும். ஒருவருடைய குறைகளை ஒருவர் பொறுத்து, தாழ்மையுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்தவனோடு ஒப்புரவாகுதல், நாம் கிறிஸ்துவோடு ஒப்புரவாகுதல் போல் நிபந்தனை அற்றதாகவும் மனப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். தண்டனை அல்லது நியாத்தீர்ப்புக்கு பயந்தோ, வேறு வழி இல்லையே என்றோ ஒப்புரவாகுதல் சரியானது அல்ல.

ஜோ என்ற ஒரு வயதான மனிதர் வாழ்ந்து வந்தார். அடுத்த வீட்டு மனிதனோடு பல ஆண்டுகளாக இவருக்குப் பிரச்சனை இருந்து வந்தது. பின் இவர் நோய்வாய்ப்பட்டு மரிக்கும் தருவாயிலிருந்தார். ஆகவே இவர் தன் மனைவியை அழைத்து, நான் அடுத்த வீட்டு மனிதரோடு பல ஆண்டுகளாகச் சண்டையிட்டு வந்திருக்கிறேன். ஒருவேளை நான் மரித்துப்போனால் கோபத்தோடுதான் நித்தியத்தைக்கழிக்க வேண்டும். ஆகவே நீ அவனை அழைத்துவா; நான் அவனிடம் ஒப்புரவாக வேண்டும் என்று கூறினார். அம்மையாரும் மகிழ்ந்துபோய் அடுத்த வீட்டு மனிதரை அழைத்துவந்தார். இருவரும் தங்கள் பிழைகளை அறிக்கைவிட்டு ஒப்பரவாகினர். அடுத்த வீட்டு மனிதர் சந்தோஷமாகத் திரும்பிச் செல்ல ஆரம்பித்தபோது ஜோ அவரை அழைத்து நாம் இப்போது ஒப்புரவாகிட்டோம். ஒருவேளை என் நோய் சுகமாகி, நான் எழுந்து நடக்க ஆரம்பித்தால், இந்த ஒப்புரவாகுதலை மறந்து பழையபடியேதான் வாழவேண்டும் என்றார்

மரணத்துக்கு பயந்தல்ல; உண்மையான மனமாற்றத்தின் அடிப்படையில் ஒப்புரவாகுங்கள். அதுவே தேவனுக்கு பிரியம்.
“தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.” 2 கொரி 5:20

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE