வெள்ளை யானை பெரிய பானை

  சலவைத் தொழிலாளியின் முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட குயவன் ஒருவன் இராஜாவிடம்போய், இராஜாவே நமது நாட்டில் பிரசித்தி பெற்ற சலவைத் தொழிலாளியிருக்க  நமது யானைகள் ஏன் கறுப்பாக இருக்க வேண்டும். அவற்றை வெண்மையாக வெளுத்துத்தர சலவைத்தொழிலாளியிடம் கூறலாமே என்றான்.
        இராஜாவும் அப்படியே கட்டளை கொடுத்தான். குயவனுக்கு ஒரே ஆனந்தம். சலவைத் தொழிலாளியின் தலை சீவப்படும் நாளை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தான். ஆனால் தந்திரமான சலவைத்தொழிலாளி இராஜாவைப் பார்த்து, “இராஜாவே கறுப்புயானைவை வெண்மையாகச் சலவை செய்வது மிகவும் எளிது. ஆனால் யானையை வைக்கும்படி ஒரு பெரிய உறுதியான மண்பானையை செய்துதரும்படி குயவனுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும்’ என்றான்.
        கட்டளை பிறந்தது, இரவுபகலாய் மாபெரும் பானையை குயவன் செய்ய முயன்றான். ஆயினும் யானையின் கால்பட்டதும் நொறுங்கிப்போயின. தன் பொறாமையால் வெட்டிய குழியில் தானே விழுந்த…. குயவன் இராஜாவால் வெட்டுண்டு மரித்தான்.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 1 கொரிந்தியர் 13:4
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE