ஏமாற்றாதீர்கள்..

கிறிஸ்தவ பிள்ளைகளிடம் காணப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு குணம் நேர்மை ஆகும். கிறிஸ்து யாரையும் ஏமாற்றினதோ, பொய் சொன்னதோ கிடையாது. அவருடைய பெயரைத் தரித்திருக்கும் நாமும் நேர்மை, உண்மை என்னும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும். பிறர் நம்மைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனேயே “உண்மையுடையவன்” என்ற எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும். நம்முடைய வேலைகளிலும், தொழில்களிலும் வியாபாரத்திலும், படிக்கும் இடங்களிலும் இப்படிபட்ட ஒரு பெயர் கிடைக்குமாறு நம்முடைய வாழ்க்கை அமையவேண்டும்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜென்ரால் யுலைசிஸ் கிராண்ட் என்பவர் நேர்மைக்கும் மிகவும் பெயர் பெற்றவராவார். “அவர் ஏமாற்றுதல் என்ற வார்த்தைக்கே பயப்படுபவர்” என்று அவரைக்குறித்து எழுதப்பட்டுள்ளது. ஒருமுறை வெள்ளைமாளிகையின் ஒரு அறையில் அவர் தனியாக அமர்ந்து, மறுநாள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய சொற்பொழிவை எழுதிக்கொண்டிருந்தார், அவ்வேளையில் அவரை சந்திப்பதற்காக ஒரு முக்கியமான மனிதர் வந்திருப்பதாக சிப்பந்தி ஒருவன் அவருடைய உதவியாளரிடம் கூறினான். ஜனாதிபதியை அவ்வேளையில் உபத்திரவப்படுத்த விரும்பாத உதவியாளர் அவனிடம் “ஜனாதிபதி இப்போது வெள்ளை மாளிகையில் இல்லை என்று அம்மனிதரிடம் கூறிவிடு” என்று சொல்லி அனுப்பினார். அடுத்த அறையிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி குதித்தெழுந்து “அப்படி எதுவும் சொல்லி விடாதே, பிறரை ஏமாற்றுவது ஒருபோதும் கூடாது” என்று கத்தினார்.

நாமும் இப்படிபட்ட குணமுடையவர்களாக இருக்க வேண்டும். சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் பிறரை ஏமாற்றுவது என்பது நம்மிடம் காணப்படாதவாறு இந்த நாளில் வாழ்க்கை நடத்துவோமாக. அதுவே தேவனுக்கு மகிமையாகும்.

“உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்” மத்தேயு 5:37கிறிஸ்தவ பிள்ளைகளிடம் காணப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு குணம் நேர்மை ஆகும். கிறிஸ்து யாரையும் ஏமாற்றினதோ, பொய் சொன்னதோ கிடையாது. அவருடைய பெயரைத் தரித்திருக்கும் நாமும் நேர்மை, உண்மை என்னும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும். பிறர் நம்மைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனேயே “உண்மையுடையவன்” என்ற எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும். நம்முடைய வேலைகளிலும், தொழில்களிலும் வியாபாரத்திலும், படிக்கும் இடங்களிலும் இப்படிபட்ட ஒரு பெயர் கிடைக்குமாறு நம்முடைய வாழ்க்கை அமையவேண்டும்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜென்ரால் யுலைசிஸ் கிராண்ட் என்பவர் நேர்மைக்கும் மிகவும் பெயர் பெற்றவராவார். “அவர் ஏமாற்றுதல் என்ற வார்த்தைக்கே பயப்படுபவர்” என்று அவரைக்குறித்து எழுதப்பட்டுள்ளது. ஒருமுறை வெள்ளைமாளிகையின் ஒரு அறையில் அவர் தனியாக அமர்ந்து, மறுநாள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய சொற்பொழிவை எழுதிக்கொண்டிருந்தார், அவ்வேளையில் அவரை சந்திப்பதற்காக ஒரு முக்கியமான மனிதர் வந்திருப்பதாக சிப்பந்தி ஒருவன் அவருடைய உதவியாளரிடம் கூறினான். ஜனாதிபதியை அவ்வேளையில் உபத்திரவப்படுத்த விரும்பாத உதவியாளர் அவனிடம் “ஜனாதிபதி இப்போது வெள்ளை மாளிகையில் இல்லை என்று அம்மனிதரிடம் கூறிவிடு” என்று சொல்லி அனுப்பினார். அடுத்த அறையிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி குதித்தெழுந்து “அப்படி எதுவும் சொல்லி விடாதே, பிறரை ஏமாற்றுவது ஒருபோதும் கூடாது” என்று கத்தினார்.

நாமும் இப்படிபட்ட குணமுடையவர்களாக இருக்க வேண்டும். சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் பிறரை ஏமாற்றுவது என்பது நம்மிடம் காணப்படாதவாறு இந்த நாளில் வாழ்க்கை நடத்துவோமாக. அதுவே தேவனுக்கு மகிமையாகும்.

“உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்” மத்தேயு 5:37

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:

NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE