உனக்குத் தூக்குத் தண்டனை

ஒரு மன்னன் தினமும் உலாவப் போவது வழக்கம். ஒரு நாள் களவு செய்து பிடிபட்ட ஒரு வாலிபனை அவரிடம் கொண்டு வந்தார்கள். அவர் திருடனைப் பார்த்து. “”வாலிபனே நான் உன் குற்றத்தை மன்னித்தேன். இனிமேல் திருடாமல் திருந்தி வாழ்” என்றார்.

மன்னனின் இனிய மொழி கேட்டு மகிழ்ந்து வீட்டிற்குச் சென்றான். மீண்டும் ஒருநாள் மன்னன் உலாவி வரும்போது, அதே வாலிபனை திருட்டுக் குற்றத்திற்காகப் பிடித்து வந்தார்கள். திருட்டு வாலிபன் மிகுந்த மகிழ்ச்சியோடு நின்றான். அரசன் அன்புள்ளவர் என்ற எண்ணம் அவனை மேட்டிமை கொள்ளச் செய்தது.

மன்னன் அவனைப் பார்த்துப் புன்னகையுடன், “”வாலிபனே! உன்னை நான் மன்னிக்கிறேன். இனிமேலாவது நீ உத்தமனாக நடந்துகொள்”. என்று சொல்லி விடுவித்தார்

மன்னனின் அன்புக் கட்டளை அங்கு நின்றோரை வியப்பிலாழ்த்தியது. என்றாலும் திருடனின் இருதயம் இன்னும் கடினப்பட்டது. திருடுவதை தண்ணீர் குடிப்பதுபோல தாராளமாகச் செய்தான். நாட்கள் கடந்து சென்றன…..

மூன்றாம் முறையாகவும் திருட்டுக் குற்றத்தில் கையுமெய்யுமாகப் பிடிப்பட்டான். அரசனிடம் கொண்டு சென்றனர். திருடன் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தெம்போடு சென்றான்.

மன்னன் நீதிபதியாக ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தார். அவர் முகம் இறுக்கமாயிருந்தது.

திருடனைப்பார்த்துச் சொன்னார்:

நண்பனே நான் உன்னை நேசிக்கிறேன். இப்பொழுதும் உன்னை மன்னிக்க எனக்கு மனமுண்டு. ஆனால் நான் என்ன செய்வேன்? நான் இங்கே நீதிபதியாகஅமர்ந்திருக்கிறேன். இப்பொழுது நானல்ல, (வேத புத்தகத்தை எடுத்துக்காட்டி) இந்தப் புத்தகமே உன்னை நியாயம் தீர்க்கிறது.

“”இப்புத்தகத்தின் சட்டப்படி உனக்குத் தூக்குத் தண்டனை தருகிறேன்”

திருடன் திகிலும் நடுக்கமும் கொண்டான். கடவுள் அன்புள்ளவர் என்று மாத்திரம் நம்பி, நியாயத் தீர்ப்பின் நாளை நாம் மறந்து விடுவோமானால் நமது முடிவும் இதுவே!

பாவத்தின் சம்பளம் மரணம்;

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE