நண்பன்

பேஸ்பால் விளையாட்டில் புகழ்பெற்று விளங்கியவர்களில் பேப் ரூத்(babe ruth) முக்கியமான ஒருவராவார். அவரது மட்டையில் பட்டுப் பாய்ந்து வரும் பந்து, பீரங்கிக் குண்டைப்போல வேகம் கொண்டிருக்கும் என்று அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. அவருக்கு வயதாக வயதாக அவர் புகழ் மங்கத் துவங்கியது, சின்சினாட்டி நகரில் நடைபெற்ற அவருடைய கடைசிப் பந்தயங்கள் ஒன்றில் அவர் மிக மோசமாக விளையாடினார். தலை குனிந்தவராக அவர் மைதானத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, முன்பு அவரைப் பாராட்டிய அதே கூட்டத்தினார், அரங்கத்திலிருந்து கேலிக் குரல் எழுப்பினர். சிலர் கோபத்தில் திட்டினார்கள்.  இவ்வேலையில் அற்புதமான ஒரு காரியம் நடைபெற்றது. ஒரு சிறு பையன் குறுக்கு வேலியைத் தாண்டிக் குதித்தான். கன்னங்களில் நீர் வழிய அந்த விளையாட்டு வீரரை நோக்கி ஓடினான். கொஞ்சமும்  கூச்சமில்லாதவனாக அவர் முன்பு மண்டியிட்டு, அவரது கால்களை அணைத்து, உறுதியாகப் பற்றிக் கொண்டான். பேப் ரூத் அவனைத்  தூக்கியெடுத்து அணைத்துக்கொண்டார், தோளில் தட்டிக்கொடுத்தார். இருவரும் கைகோர்த்தவர்களாக மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
       எந்த நிலையிலும் அன்புகாட்டுவதே உண்மையான நட்பு.இயேசு கிறிஸ்து நமக்கு இப்படிப்பட்ட ஒரு நண்பராயிருக்கிறார். “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்” (யோவான் 15:14) என்று அவர் தமது சீடர்களிடம் கூறியதற்குப் பொருள் “”நான் உங்கள் நண்பன்” என்பதே, நமக்காக மரித்து, தமது பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மைத் தாங்கிவரும் இவரைப் போன்ற உண்மை நண்பர் வேறெவரும் உண்டோ?
          உலகம் நம்மைப் புறக்கணிக்கும்போதும், இயோசு நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதை நாமறிவோம். அவரே மெய்யான நண்பர்.
    சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான். நீதிமொழிகள் 17:17
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE