கடவுளை மறந்துவிடத் தீர்மானித்தார்

பாறைகளால் சூழப்பட்ட கடற்கரை கிராமம் குட்லக். அது, அமொரிக்காவில் நியு ஜெர்ஸி நாட்டில் உள்ளது. 1270 ஆம் ஆண்டில் ஒரு பாய்மரக் கப்பல் அந்தப் பாறைகளில் மோதியது. அநேகர் மாண்டனர். உயிர் தப்பிய ஒரு சிலரில் மரே என்ற ஒரு போதகரும் உண்டு. அவரது மனைவி, மக்கள் யாவரும் மரித்துவிட்டனர். இந்தக் கொடிய துயரத்தை அவரால் தாங்கமுடியவில்லை. தம்மை அநாதையாக்கிய கடவுளை மறந்துவிடத் தீர்மானித்தார். மனித வாசனை அதிகமாக இல்லாத அப்புதிய இடத்தில் வாழ்நாளைக் கழிக்கவும், மனம்போல் வாழவும் தீர்மானித்தார். கலக்கம் நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி: “உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உமக்காகவே, இந்த மீன்களைத் தயாராக வைத்திருக்கிறேன்” என்றான்.
    “என்னை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் மரே. அதற்குத் தாமஸ் என்ற மனிதன் பதில் சொன்னான்: “ஐயோ, உம்மை அறியேன், ஆயினும் கடவுளைப்பற்றி எங்களுக்கு அறிவிக்க, கடவுள் அனுப்பிய ஊழியன் நீர்  என்பதை நிச்சயமாக அறிவேன்” என்றான்.
     “இனிமேல் எந்தப் பிரசங்கமும் செய்ய நான் தயாராக இல்லை” என்றார் மரே.
    தாமஸ் தொடர்ந்து பேசினான்: “நான் ஒரு மாலுமி. எனக்குப் படிக்கத் தெரியாது. என் மனைவி சிறிது படிக்கத் தெரிந்தவள். இருபது ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். என் மனைவி சில வேத வாக்கியங்களைக் கூறுவாள். அதைக் கேட்க, கேட்க, கடவுளைப்பற்றி அதிகமாக அறிய விரும்பினேன். அதோ தெரியும் சின்ன ஆலயத்தை நானே கட்டினேன். அதன் ஊழியக் காரனும் நானே. எனக்கோ ஆண்டவரைப்பற்றி அதிகம் தெரியாது. நிலையாக எங்களோடு தங்கி, கடவுளைப்பற்றி அறிவிக்க ஒருவர் வேண்டும் என்பது எங்களது நீண்ட நாளைய ஜெபம். நேற்றிரவு ஓர் அதிசயக்குரல் கேட்டது: “கப்பற்சேத மூலம் உங்களுக்கு ஒரு போதகரை ஊழியனாக  அனுப்பியுள்ளேன்! அந்தக் குரல் கேட்ட நேர முதல் உமக்காகக் காத்திருக்கிறேன். எங்களை விட்டு நீர் எங்கும் போகக்கூடாது” என்றான் தாமஸ்.
   தாமஸின் கதையைக் கேட்ட போதகர் மரே, தெய்வசித்தத்தை உணர்ந்தார். தம் குற்றத்தை அறிக்கையிட்டார். ஊழியப் பணிவிடை செய்தார். அங்கு ஒரு அருமையான சபை எழுந்தது.
“நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்” (யோபு 16:12).
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE