தங்கப் பதக்கம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் கார்ல் லூயிஸ். இவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர். இவர் தங்கம் வென்ற விதம் ஒரு வியப்பூட்டும் அற்புதம் என்றே சொல்லலாம். இதோ அவரது சாட்சி.
லூயிஸ் நிச்சயம் இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்வார் என்று அமெரிக்கர்கள் ஒவ்வொருவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் லூயிசும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். மட்டுமல்லாமல் தினமும் வேதம் வாசித்து ஜெபிக்கும் பழக்கமுடைய லூயிஸ் இயேசப்பாவிடம் ஆண்டவரே இம்முறை ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கம் வெல்ல நீர் தான் கிருபை செய்ய வேண்டும் என்று ஜெபித்து வந்தார்.
இப்படியாய் நாட்கள் கடந்து செல்ல, அந்த நாளும் வந்தது. போட்டித் தொடங்கும் நேரம் வரை லூயிஸ் மனதில் ஜெபித்துக் கொண்டேயிருந்தார். அனைவரின் ஆரவாரத்திற்கிடையே போட்டியும் தொடங்கியது. முதலில் முதன்மையாக ஓடத்தொடங்கிய லூயிஸ் சற்று நேரத்தில் ஆப்ரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஒருவாரால் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அசுர வேகத்தில் ஓடிய அவ்வீரரின் வேகத்திற்கு லூயிஸால் ஈடுகொடுக்க இயலாமல். இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். பந்தய தூரத்தை கடந்து முடித்த லூயிஸின் கண்களில் கண்ணீர் அது ஆனந்த கண்ணீரல்ல, துக்கத்தில் வந்த கண்ணீர் எனது நான்கு வருடப்பயிற்சி, உழைப்பு, ஆசை, கனவு எல்லாம் சில நொடிப்பொழுதில் தவிடு பொடியானதே. இயேசப்பா என் ஜெபத்தை கேளாமல் போனீரோ? என்று கதறி அழுதார் லூயிஸ், எனினும் இயேசப்பா மேல் சினம் கொள்ளாமல், அந்த துக்கத்திலும் அவரைத் துதிக்க ஆரம்பித்தார். அப்பொழுது தான் அந்த அறிவிப்பு அங்கிருந்த அனைவரையும் திடுக்கிடச் செய்தது.
கதறி அழுதுக் கொண்டிருந்த லூயிஸ் தன் செவியை நம்ப முடியாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தார். அந்த அறிவிப்பு என்ன தெரியுமா? ஓட்டப்பந்தயத்தில் முதலாம் இடத்தைப்பிடித்த வீரர் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்த லூயிஸ் முதல் பரிசு பெற்றவராக அறிவிக்கப்படுகிறார் என்பதே அந்த நற்செய்தி
ஆம் நண்பர்களே நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர். ஒரு போதும் உன் ஜெபம் வீணாய் திரும்பாது. சிறுசிறு ஜெபங்களுக்கு கூட அவர் செவி சாய்கிறார்
நிச்சயம் உன் ஜெபங்களுக்கு பதில் உண்டு.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE