உண்மையான வழிகாட்டி

நயாகரா நீர்வீழ்ச்சி ஏற்படும் மலையுச்சியில் பெரும்காற்றின் குன்று என்று அழைக்கப்படுகிற ஒரு அழகிய பகுதி உண்டு. அதனை அடைவது மிகவும் ஆபத்தானது. மலையுச்சியின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு இடையில் இடைவெளி பத்தடி தூரமே இருந்தாலும் அதை ஒரு இரும்பு கம்பியின் மேல் நடந்துதான் கடக்க முடியும்.

ஒரு உல்லாசப் பயணிகளின் குழுவினர் அந்த இடத்திற்கு செல்ல விரும்பினார்கள். எல்லாரும் அந்த கம்பியின் வழியாக துணிச்சலாக நடந்து விட்டனர். ஆனால் ஒரு பெண்மணி மாத்திரம் பயந்து கொண்டு வரமாட்டேன் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். நிலைமையை அறிந்த வழிகாட்டி அந்த பெண்மணிக்கு முன்பாக பலமுறை நடந்துகாட்டினார். அப்போதும் அவளுக்கு தைரியம் வரவில்லை. எனவே அந்த வழிகாட்டி தன் கையை நீட்டி என் கையை பிடித்துக் கொள்ளுங்கள் அப்படியே நடந்து பாருங்கள் என்றார். அந்த பெண்மணியின் ஒரு கை வழிகாட்டியின் கையை பிடித்திருந்தது. மறு கையோ பழைய இடத்திலேயே உறிதியாய் பிடித்திருந்தது. வழிகாட்டியினால் முன்னேற முடியவில்லை.

மீண்டும் வழிகாட்டி மிகவும் அன்போடு அம்மா உங்கள் இரண்டு கைகளையும் தாருங்கள். என்னை நம்புங்கள் என்றார். அப்படியே அந்த பெண்மணி தன் இரண்டு கைகளையும் நீட்டி அவரைப் பிடித்துக்கொண்டு அந்த கம்பியின்மேல் எளிதாய் நடந்து கடந்து சென்றாள்.

தேவபிள்ளையே, இயேசு உன்னை இருகரம் நீட்டி அழைக்கிறார். வேதம் சொல்லுகிறது, “”அவரே விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிறார் (எபி. 12:1). உன்னை முற்றிலும் அர்ப்பணித்து அவரோடு நடப்பாயா? பூரணத்தை நோக்கி அர்ப்பணிப்பாயா? அந்த அன்பு இரட்சகர் நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவர் மாத்திரமல்ல, ஜெயத்தோடு முடிவடையச் செய்கிறவரும் கூட, கிறிஸ்துவுக்குள் நமது விசுவாசம் ஆரம்பமாய் இருக்குமானல் நாம் பாக்கியவான்கள். விசுவாசத்தை ஆரம்பித்த ஆண்டவர் அந்நாள் வரைக்கும் பாதுகாக்கவும் பூரணப்படுத்தவும் உண்மையுள்ளவராகவும் வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE