விமானி..தலையில் துப்பாக்கி

ஜான் டெஸ்டிரேட்(John Testrake) ஒரு விமானி. அவர் 145 பயணிகளோடு 847வது எண். தைவான் விமானத்தை ஓட்டி சென்றபோது, அந்த விமானம் 17 நாட்களுக்கு பெய்ரூட்டுக்கு (Beirut) கடத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பின்பு ஜான் டெஸ்டிரேட்டின் முகத்தை கண்ணாடி வழியாக பார்த்த ஒரு புகைப்படம் வெளியானது. அதில் ஒரு தீவிரவாதி அவருடைய தலையில் துப்பாக்கி வைத்தவனாக நின்று கொண்டிருந்தான். ஆனாலும் ஜானின் முகம் சாதுவாகவும், அமைதியாகவும், சிரித்தவண்ணமாகவும், நம்பிக்கையுடையதாகவும் காணப்பட்டது. விடுதலைக்கு பின்பு “ஏன் மிக அமைதியாக இருந்தீர்கள். உங்களிடத்தில் பயம் காணப்படவில்லையே? என வினவினபோது, “என்னை தேவன் நேசிக்கிறார்” என நான் அறிவேன். நானும் அவரை உயிராக நேசிக்கிறேன். ஆகையால் நான் சமாதானம் அடைந்தேன். கிறிஸ்து இயேசுவின் பிரசன்னத்தை நான் தொடர்ந்து உணர்ந்தேன்” எனக் கூறினர்.
நண்பர்களே! அவர்(இயேசு) நம்மை நேசிக்கிறார். நாம் அவரை நேசிப்போமானால் அவர் நம்மோடே எப்பொழுதும் இருக்கிறார். பயம் இல்லை. என்றென்றும் நமக்கு சமாதனம் உண்டு.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE