கழுதை சிறந்த உழைப்பாளி

நம்மூரில் சிலர் திட்டும்பொழுது, ‘சோம்பேறிக் கழுதை’ என்று திட்டுவார்கள். ஆனால் கழுதை சிறந்த உழைப்பாளி, கழுதை, உயரமான மலைப்பகுதிக்கு இராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்ல இரானுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. பொதிசுமக்கவும் உதவுகிறது. கழுதையைப் பற்றிச் சில சுவாரஸ்யமான தகவல்களைக் காண்போம்.

‘கழுதை ஒருமுறை ஓரிடத்தில் கல் தடுக்கி விழுந்தால், மீண்டும் அந்த இடத்தில் கால் இடறி விழுவதில்லை’ என்னும் பொருலில் சீனப் பழமொழி ஒன்று உண்டு. கழுதை என்னும் மிருகம் சாதாரணமானது என்று தோன்றலாம். கழுதைப் பாலில் மருத்துவக்குணங்கள் உள்ளதென்றும், கழுதைப் பால் தாய்ப்பால் போன்று தூய்மையானது, நன்மைகள் நிறைந்தது என்று வாதம் செய்யக்கூடிய அறிவியலாளர்கள் இருக்கிரார்கள். எளிதில் ஜீரணமாகும் புரோட்டிங்கள் அதிகம் கொண்டது. குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப் பால் கொடுக்கலாம் என்று ஹரியானாவில் அமைந்திருக்கும் தேசிய ஆராய்ச்சி மைத்தில் உள்ள டாக்டர் எம். பி. யாதவ் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் கழுதைப் பால் விற்கும் மையங்கள் உள்ளன. நான் ஒன்றுக்கு 10 மி.லி. வீதம் மூன்று நாள் இதனைக் கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் சில நோய்கள் குணமாகும் என்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் உடல்நல மையத்தில் பணிபுரியும் டாக்டர் எஸ். கோபால் கூறுகிறார்.

அதிக இனிப்பும், குறைந்த கொழுப்பும் கழுதைப்பாலில் உள்ளன. இதைக்குடித்தால் குரல்வளம் பெருகும் என்று கூறுபவர்கள் உள்ளனர். உடல் அழகுக்கும்
கழுதைப்பால் பயன்படுகிறது. தோல் பாதுகாப்புக்காகத் தயாடிக்கும் சோப்புகளில் கழுதைப்பால் உபயோகிக்கிறார்கள். எகிப்துப் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாள் என்று சில புத்தகங்கள் தெரிவிக்கின்றன. கழுதைகளின் வயிறு ஒன்பது லிட்டர் வரை நீர் கொள்ளும் தன்மையுடையது. எனவே, நீர்ப்பற்றாக்குறை உள்ள இடங்களில் சுமைகளைத் தூக்கிச் செல்லக் கழுதை பயன்படுகிறது. கழுதையின் ஆயுள்காலம் 30 வருடங்கள். இதன் எடை 140 முதல் 170கிலோ வரை இருக்கும். புல், வைக்கோல், சோளம், தவிடு, உமி, கரும்புச்சக்கை, மொலாஸ்ஸ் போன்றவற்றைக் கழுதை உணவாக உட்கொள்ளும். இதனுடைய கண்பார்வை அரை மைல் தூரம் வரை பார்க்கும் சக்தி வாய்ந்தது.

இதனால் தானோ என்னவோ, பிலேயாம் பார்க்க முடியாத தூதனை, கழுதை தெளிவாய் கண்டது (எண்: 22:23). மாத்திரமல்ல கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்து பிலேயாமுடன் பேசும்படிச் செய்தார் (எண்: 22:28). ஆறு நாட்களும் வேலை செய்து ஏழாம் நாளில் உன் கழுதையும் இளைப்பாற வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார் (யாத்: 23:12).

ஆம், அவரால் யாரையும் பயன்படுத்த முடியும். ஒரு கழுதையைக் கூட ஆண்டவரால் பேச வைக்க முடியும் சிலர் எப்போதும் நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று எப்போதும் தங்களைத் தாங்களே தாழ்ச்சிப் பேசிக் கொண்டிருப்பார்கள். இயேசுவுங்கூட எருசலேமுக்கு பவனி வந்தபோது, ஒரு குதிரையை தெரிந்து கொள்ளவில்லை, மாறாக ஒரு கழுதைக்குட்டியின் மேல் ஏறி வந்தார் (மத்: 21:4: யோ: 12:14). நமது ஆண்டவர் அப்படி வருவார் என்று எழுதி வைத்த தீர்க்கதரிசன வார்த்தைகளின் நிறைவேறுதலாவும் இருந்தது.

“சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூறு; எருசலேம் குமாரத்தியே கெம்பீரி; இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும், கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருகிறவர்.”

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE