ஒரே தலைவலி.. பா.

ஜாய்ஸ் மேயர் அகிலம் அறிந்த ஊழியர். ஒருநாள் காலை தலைவலியோடு எழுந்தார்கள். ஜெபிக்க முடியவில்லை. துதிக்க முடியவில்லை. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வருவோர் போவோர் அனைவரிடமும் தலைவலியை குறித்துதான் பேச்சு. உதவியாளர் வந்தார். அவரிடமும் தலைவலியை பற்றி விளக்கம் கேட்டார். வேலைக்காரியிடமும் தலைவலி வந்தால் என்ன செய்வாய் என்ற விவாதம். இப்படியாக அந்த நாளின் மாலை நெருங்கியது. மாலை ஒரு கூட்டத்தில் பேச வேண்டும். அதுவரைக்கும் தலைவலியோடு போராடிக் கொண்டிருந்தவர் ஜெபிக்க முழங்கால் படியிட்டார். ஆண்டவரே இந்த தலைவலியால் கஷ்டப்படுகிறேன். ஏன் எனக்கு வருகிறது. இந்த சின்ன பிரச்சனையை தீர்க்கமுடியவில்லையே என்று ஜெபிக்க ஆரம்பித்தார். கர்த்தர் இடைபட்டார், நீ காலையிலே என்னிடம் முழங்காற்படியிட்டிருந்தால் உடனே தலைவலியை நீக்கியிருப்பேன். சின்ன பிரச்சனைதானே என்று நீயே தீர்த்துக் கொள்ள முயற்சித்தாய். அதனால் தான் தீரவில்லை என்றார். மேயர் தன் தவறை உணர்ந்து கர்த்தரிடம் வேண்டினார். உடனே தலைவலி நீங்கிற்று.

சின்ன பிரச்சனை தானே நாமே பார்த்துக் கொள்ளலாம் என்று கர்த்தரிடம் ஆலோசிப்பதில்லை. சின்ன பிரச்சனை பெரும் பாடாக மாறி விடுகிறது எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்க்க அவராலே மட்டும் தான் முடியும், எனவே உன் பிரச்சனைகளைப் பார்க்காதே பிரச்சனைகளைத் தீர்க்கும் இயேசு கிறிஸ்துவையேப் பார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE