போதுமென்கிற மனம்

“அதை இச்சித்து விசுவாசத்தை விட்டு வழுவி அநேக வேதனைகளாலே தங்கள் உருவக்குத்திக் கொண்டிருக்கிறார்கள்”

சேரநாட்டில் ஒரு மன்னன் இருந்தான் அவனுக்கு படிப்பு அவ்வளவு இல்லை ஆகவே தனக்குள் சொற்ப அறிவைக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அவனுக்கு புலவர்கள் என்றால் அலாதி பிரியம். புலவர்கள் அரசனை புகழ்ந்து பாடின பின்பு அவர்களுக்கு அரசன் தரும் பரிசு விதமே தனி அதாவது புலவர் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாரோ, அந்த ஊர் எத்தனை மைல் தூரம் என்று கேட்டு அத்தனை பொற்காசுகளை தந்து அனுப்புவான்.ஒரு முறை ஒரு புலவன் வந்து அரசனை புகழ்ந்து பாடினான். அரசனும் வழக்கம் போலவே எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாய் என கேட்டான்.புலவர் மதுரையிலிருந்து வந்திருப்பதாக கூற மதுரை எத்தனை மைல் என்று மந்திரியிடம் விசாரித்தான். முன்னூறு மைல் என பதில்வரவே முன்னூறு பொற்காசுகள் கொடுத்தனுப்பு என கூறினான். இதனை அறிந்த ஒரு பண ஆசை பிடித்த புலவன் வந்து அரசனை புகழ்ந்து பாடினான். அரசனும் எங்கிருந்து வருகிறாய் என கேட்க, நான் வைகுண்டத்திலிருந்து வருகிறேன் என கூறினான் புலவன். அது எவ்வளவு தூரம் என மந்திரியிடம் கேட்டான். மந்திரி பிரதியுத்தரமாக “மன்னா, அது கூப்பிடும் தூரத்தில் உள்ளது. நாம் கூப்பிட்டால் ஆண்டவர் உடனே நம் கூப்பிடுதலுக்கு வந்து விடுவார்” என கூறினார். அப்படியானால் அது ஒரு மைல் தூரத்திற்க்குள் தான் இருக்க வேண்டும் என் கூறி புலவனுக்கு ஒரு பொற்காசு கொடுத்தனுப்பு என கூறினார். உலகில் பண ஆசை இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால் அதுவே சகல தீமைக்கும் வேராயிருக்கிறது என்பதை மட்டும் உணர மறுக்கிறர்கள். மேலும் ” உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை; இதிலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை என்பது நிச்சயம்” (1 தீமோ 6:7) என்பதனையும் நாம் அநேக வேளைகளில் மறந்து விடுகிறோம். நமக்கு தேவையான உணவு, உடுக்க உடை மற்றும் இருப்பிடம் இவைகளை அவர் நிச்சயம் தந்து நம்மை போஷிப்பார். இதனை அறியாதவர்கள் தான் பண ஆசையினால் தங்களை உருவகுத்திக் கொண்டிருக்கிறார்கள்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE