அரசரைப்பிடித்த காட்டுவாசிகள்

ஒரு ஊரில் அரசனும் மந்திரியும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். அரசர் எங்கு சென்றாலும் மந்திரியும் உடன் செல்வது வழக்கம். மந்திரி தெய்வ பக்தி மிகுந்தவர் தன்வாழ்க்கையில் கர்த்தர் அனுமதிக்கும் யாவுமே நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் அரசருக்கோ கடவுள் பக்தி கொஞ்சம்கூட கிடையாது. மந்திரியும் அரசருக்கு ஆண்டவரைப் பற்றி எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று வகைத்தேடிக் கொண்டிருந்தார்.

அன்று ஒரு நாள் உண்பதற்காக பழம் ஒன்றினை நறுக்கும்போது கத்தி நழுவி அவரது கையை பலமாக வெட்டியது. இரத்தம் நிறைய வெளியேறி வலியால் அரசர் துடித்துக் கொண்டிருந்த வேளையில் மந்திரி அதைப் பார்த்து இது உங்கள் வாழ்க்கையில் நடந்தது நண்மைக்கே என்று சொன்னார். அதைக் கேட்ட மாத்திரத்தில் அரசருக்கு கடுங்கோபம் மூண்டது. நான் வலியால் துடிப்பது உனக்கு நன்மையாகத் தெரிகிறதா? என்று சொல்லி, யார் அங்கே இந்த மந்திரியை தூக்கி சிறையில் அடையுங்கள் என்று ஆணையிட்டார்.

நாட்கள் கடந்தன. அரசர் வழக்கம்போல வேட்டைக்கு கிளம்பினார். ஆனால் இம்முறை மந்திரியில்லாமல் தனியே கிளம்பினார். காட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் ஈட்டி ஏந்திய காட்டுவாசிகள் அரசரை சிறைப்பிடித்தனர். இந்த அரசனை எப்படியாவது நம் கடவுளுக்கு பலி கொடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் பேசிக் கொண்டது அரசனின் காதுகளில் விழுந்தது. அரசரைப்பிடித்த காட்டுவாசிகள் பலியிடுவதற்கு அரசனின் கை, கால்களை கட்ட முற்பட்டனர். அப்பொழுது காட்டுவாசிகளில் ஒருவன் அரசனின் பழம் வெட்டும்போது துண்டிக்கப்பட்ட விரலைப் பார்த்தான். உடனே தலைவனின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தான். உடனே காட்டுவாசித் தலைவன் அரசரே உங்கள் கைவிரல்களில் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது. எங்கள் தெய்வத்திற்கு ஊனமுற்ற ஒருவரை நாங்கள் பலி கொடுப்பதில்லை. எனவே நீங்கள் போகலாம் என்று சொல்லி அரசனை விடுவித்தான்.

அரண்மனைக்கு வந்த அரசனுக்கு மந்திரி இந்த காயமும் நன்மைக்கே என்று கூறியது ஞாபத்திற்கு வந்த மந்திரியிடம் அரசன் நடந்ததையெல்லாம் கூறி எவ்வாறு கர்த்தர் தன்னை காத்துக் கொண்டார் என்பதையும் அறிவித்தான். உடனே மந்திரி, அரசரே நான் சிறைச்சாலையில் இருந்ததும் நன்மைக்கே இல்லையேல் வழக்கமாக உம்மோடு வேட்டைக்கு நான் வந்திருந்தால், ஊனமற்ற என்னை அவர்கள் பலி கொடுத்திருப்பார்கள் என்று கூறினார்.

அதுவரை கர்த்தரை நம்பாத அரசர் அன்று முதல் கர்த்தர்பேரில் நம்பிக்கை வைத்தார்.

நண்பனே உன் வாழ்வில் கர்த்தரின் சித்தப்படி நடக்கின்ற யாவும் நன்மைக்கேதுவாகவே முடியும். எனவே உன் வாழ்வில் நடக்கிற எதையும் குறித்துக் குறைக் கூறாமல் தொடர்ந்து துதி, கர்த்தர் சகலத்தையும் நன்மையாக முடியப்பண்ணுவார்.

“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழிக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவான நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” ரோமர் 8:28.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE