நான் எங்கே போகிறேன்…

திரு.ஆலிவர் வென்டெல் ஹோம்ஸ் என்பவர் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கறிஞராவார். ஒரு முறை இவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, டிக்கெட் பரிசோதகர் இவரிடம் டிக்கெட்டைக் கேட்டார். உடனே ஆலிவர் கோம்ஸ் அங்குமிங்கும் தேடினார். அதிக நேரம் தேடியும் கிடைக்காததால் மிகவும் கவலையுற்றார். இதைக் கண்ட டிக்கெட் பரிசோதகர் அவரிடம் “மிஸ்டர் ஹோம்ஸ் அவர்களே, நீங்கள் இப்போது டிக்கெட் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யுங்கள். வீடு சென்று சேர்ந்தவுடன் டிக்கெட்டை எங்கள் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்புங்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட ஹோம்ஸ் அந்த டிக்கெட் பரிசோதகரிடம், “அன்பு வாலிபனே இப்போது என் கவலை டிக்கெட்டைக் குறித்ததல்ல, நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை” என்று கூறினாராம்.

ஆம்! இந்த வழக்கறிஞர் ஹோம்ஸைப் போலவே வாழ்க்கைப் பயணத்தில் அநேகர் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் ஒரு இலக்கு இல்லாம; மனம்போன போக்கில் வாழ்கிறார்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்றோ, இந்த வாழ்க்கைப் பயணத்தின் முடிவில் என்ன நடக்கப்போகிறது என்றோ புரியாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒருவேளை அவர்களுடைய வாழ்வின் கடைசி நாளாக இருந்தால் நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறோம் என்று புரியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்பு நண்பனே! உன் நிலை என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரலோகத்தின் இலக்கை நோக்கி வாழ்க்கை நடத்துகிறாயா? இன்று மரணம் உன்னைச் சந்தித்தாலும், அடுத்த முறை இரட்சகரின் அழகு முகத்தை நான் காண்பேன் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கிறதா? சிந்திக்க வேண்டியது அவசியம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE