அரசவையில் ஒரு கோமாளி

அரசவை கூடிற்று………ராஜா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அரசவையில் ஒரு கோமாளி இருந்தான். அவன் அறிவில் சிறந்தவன். ராஜா வேடிக்கையாக ஒரு கம்பை அவன் கையில் கொடுத்து உன்னைக் காட்டிலும் ஒரு முட்டாளைக் கண்டு பிடித்தால் அவனிடம் இதைக் கொடு என்றார். கோமாளி தங்களிடம் கொடுத்துவிடுவான் என்று சொல்லி ஜனங்கள் எல்லாத்திசைகளிலும் ஓடினார்கள். ஆனால் கோமாளியோ யாரிடத்திலும் கொடுக்கவில்லை. எல்லோரும் அவனை முட்டாள், முட்டாள் என்று சொல்லி சிரித்தார்கள். அவனும் ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு கம்போடு போய்விட்டான். ராஜா சிரித்தார், ராணி சிரித்தார்கள். அரசவை அன்று மகிழ்சியோடு கலைந்து.

மூன்று வருடங்களுக்குப் பின்னர்….. ராஜா நோய்வாய்ப்பட்டார். எல்லோரும் பார்த்து விட்டுச் சென்றார்கள். கோமாளியும் பார்க்க வந்தான். ராஜாவை விசாரித்தான். ராஜாவே எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டான். ராஜா பதில் சொன்னார் மிகவும் மோசமாக இருக்கிறது. வைத்தியர்கள் என்ன சொன்னார்கள் என்று கோமாளி கேட்டான். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று வைத்தியர்கள் சொன்னதாக ராஜா சொன்னார். ராஜாவே, மரித்தவுடன் எங்கே போகப் போகிறீர்கள் என்று கோமாளி கேட்டான். ராஜா சொன்னார், எல்லோரும் எங்கே போகப் போகிறார்களோ அங்கேதான் நானும் போகிறேன் என்றார். திரும்பவும் கோமாளி கேட்டான். ராஜாவே போகப் போகும் இடத்திற்கு ஆயத்தம் பண்ணினீர்களா என்று? ஆயத்தம் என்றால் என்ன! என்று ராஜா ஆச்சர்யத்தோடுக் கேட்டார்.

கோமாளி சொன்னான். ராஜாவே, 10கிமீ தூரத்தில் இருக்கும் காட்டிற்கு நீங்கள் வேட்டையாடச் செல்லும் போது முதலிலேயே போர் வீரர்களை அனுப்பிவிடுவீர்கள். அவர்கள் உமக்குக் கூடாரம் அமைத்து பல வகையான உணவுகளை தயாரித்துக் காத்திருப்பார்கள். நீங்களும் வேட்டையாடி களைத்து வந்து அந்த கூடாரத்தில் தங்கி சாப்பிட்டு இளைப்பாறி அரண்மனைக்குத் திரும்புவீர்கள். 10கிமீ தூரத்தில் இருக்கும் காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் நீர் இவ்வளவு ஆயத்தப்பட்டு செல்கிறீரே, ஆனால் மரித்தவுடன் நீர் போகும் இடம் இன்னதென்றும் தெரியவில்லை, அதற்கான ஆயத்தமும் பண்ணவில்லை என்றும் சொல்கிறீர்கள். ராஜாவே ஒரு நிமிடம் பொறுத்திருங்கள் என்று சொல்லி வீட்டிற்குச் சென்று ராஜா முன்பு கொடுத்த கம்போடு வந்து ராஜாவிடம் சொன்னான், ராஜாவே மூன்று வருடங்கள் முன்பு அரசவையில் என்னிடம் இந்த கம்பைக் கொடுத்து, உன்னைக் காட்டிலும் முட்டாளைக் கண்டுபிடித்தால் இந்தக் கம்பைக் கொடு என்று சொன்னீர்கள். இன்று நான் கண்டு பிடித்து விட்டேன்….. என்னைக் காட்டிலும் நீர் தான் மிகப் பெரிய முட்டாள். ஏனென்றால் மரித்தவுடன் நீர் எங்கேப் போகப் போகிறீர் என்று உமக்குத் தெரியவில்லை. அதற்கான ஆயத்தமும் பண்ணவில்லை, ஆகவே என்னைக் காட்டிலும் நீர் தான் மிகப் பெரிய முட்டாள் என்றான்.

மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பதற்கு புதிய ஏற்பாட்டில் லூக்கா சுவிசேஷம் 16ஆம் அதிகாரம் 19 முதல் 31 வரை உள்ள
வசனங்களை வாசித்துப் பாருங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்:நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலே அல்லாமல் ஒருவனும் பரலோகம் வந்தடையான்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE