ஜீவன் தந்த மன்னன்

ஏதென்ஸ் நாட்டு மக்கள் தங்கள் மன்னரை உயிருக்குயிராக அன்பு செய்தனர். டோரியர் படையெடுத்து வந்து ஏதென்ஸைச் சுற்றி வளைத்தனர். ஒன்று ஏதென்ஸ் நாட்டைக் கைப்பற்ற வேண்டும் அல்லது அந்நாட்டு மன்னரை கொன்றுவிட வேண்டும் என்பது தான் டோரியப் படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை. தங்கள் மன்னர் கொல்லப்படுவதை ஏதென்ஸ் நாட்டு மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ளமுடியும்? ஒரு நாள் இரவு ஏதென்ஸ் நாட்டுப் பாமரன் ஒருவன் வேண்டுமென்றே டோரியர் படைக்குள் சென்று சண்டையிடத் தொடங்கினான். சண்டை வலுத்தது .அந்த ஏழை விவசாயியை டோரியர் படை வீரர்கள் கொல்வதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. இச்செய்தி காட்டு தீ போல் பரவியது . நடந்ததை அறிய ஏதென்ஸ் மக்கள் ஓடிவந்தனர். அதற்க்குள் டோரியப் படை ஏதென்ஸை விட்டு ஓடிவிட்டது . காரணம் என்ன? ஏழை பாமரன் போல் வந்து தன்னந்தனியாய் சண்டையிட்டுத் தன்னையே அழித்துக் கொண்டவன் வேறுயாருமில்லை , ஏதென்ஸ் மக்கள் உயிருக்குயிராய் அன்பு செய்த மன்னர்தான் மாறுவேடத்தில் வந்து மக்களை காப்பாற்றினார். தன் நாட்டு மக்களுக்காகத் தன்னையே அழிக்கத் துணிந்த அந்த மாமன்னரின் அன்புதான் என்னே.

ஆம், நம், அன்பு இரட்சகர் இயேசுவும் நமக்காக தன் ஜீவனையேத் தந்தார் யோவான் 10:1 ல், “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறார்” என்று இயேசு சொன்னார். “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யேவான் 4:9) என்று வாசிக்கிறேம் . இவ்வளவாய் நம்மில் அன்புகூர்ந்த தேவனை நாமும் இன்னும் அதிகமாய் நேசிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் , பாவத்துக்கு விலகி பரிசுத்த வாழ்க்கை வாழ்வதே நாம் அவரிடம் செலுத்தும் அன்புக்கு அடையாளம் ஆகும். அதுபோலவே இன்னொரு அடையாளம் அவர் தமது சாயிலின்படி
படைத்த மனிதர்களிடம் அன்பு காட்டுவதாகும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE