அவன் பெயர் ஜான்.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் செல்வம் தேடி இந்தியாவுக்கு வந்தான் அவன் பெயர் ஜான். அநேக ஆண்டுகள் இந்தியாவில் வாணிபம் செய்துவிட்டுத் தன் கப்பல் நிறைய பொன்னோடும், பொருளோடும் தாய்நாடு திரும்பினான். நேராகத் தன் உறவினர்களைச் சந்திப்பதற்கு பதிலாக மிகவும் பழமையான, அழுக்கான, கந்தை வஸ்திரங்களை தன்மேல் ஊடுத்திக்கொண்டு அவன் சித்தப்பாவிடம் போய் “நான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். என் சொத்து சுகம் யாவும் இழந்து விட்டேன். நான் உங்கள் வீட்டில் தங்கலாமா”? என்று கேட்டான். அதற்கு அவன் சித்தப்பா “ஜான் உனக்கு உதவி செய்ய எனக்கு விருப்பம்; ஆனால் என் வீட்டில் இப்போது காலி அறைகள் ஒன்றும் இல்லை” என்றான். இப்படி ஒவ்வொரு உறவினரும், நண்பரும், பதிலளித்தார்கள். ஆகவே ஜான் தன் கப்பலுக்குத் திரும்பிச் சென்று, விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டு, நிறைய வேலை ஆட்கள் பின்தொடர, ஊருக்குள் வந்து, பெரிய வீடொன்றை விலைக்கு வாங்கி, செல்வச் செழிப்புடன் வாழ்ந்தான். இத்தனை செல்வந்தன் என்று தெரிந்திருந்தால் அவனை எவ்வளவு வித்தியாசமாக நாம் நடத்தியிருப்போம்” என்று பேசிக்கொண்டார்கள்.

நண்பர்களே…இதே போல நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தலை சாய்க்க இடமில்லாதவராக நம் உள்ளத்தில் இடம் கேட்கிறார். வாசலுக்கு வெளியே நின்று தட்டும் அவரை, “உள்ளே வாரும்” என்று அழைத்து நம்மிடம் சேர்த்துக் கொண்டால், சீக்கிரத்தில் அவர் ராஜாதி ராஜனாக, கர்த்தாதி கர்த்தனாக மேகங்களின் மேல் தூதர்கள் புடைசூழ, மகிமையில் வெளிப்படும் போது நமக்கு புகழ்ச்சியுண்டாகும். அவர் நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கும் வாசஸ்தலங்களில் நாம் குடியிருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE