மோசேயின் வாழ்க்கை…

மோசேயின் வாழ்க்கையில்…நம்முடைய உள்ளங்களைக் கவர்கிற அநேக முரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. அவர் ஓர் அடிமையின் பிள்ளையாகவும், ஓர் அரசியின் குமாரனாகவும் இருந்தார். அவர் ஒரு குடிசையில் பிறந்திருந்தாலும், அளவிட முடியாத செல்வத்தை அனுபவித்தார். அவர் சேனைகளின் தலைவராகவும், ஆடுகளைக் காக்கிறவராகவும் இருந்தார். அவர் பராக்கிரமத்தில் மிகவும் சிறந்து விளங்கியவராகவும், உலகத்திலுள்ள எல்லா மனிதரைக் காட்டிலும் மிகுந்த சாந்தமுள்ளவராகவும் இருந்தார், அவருக்கு அரசனுடைய சபையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் வனாந்திரத்தில் குடியிருந்தார், எகிப்தின் ஞானமும், ஒரு சிறு பிள்ளைக்குரிய விசுவாசமும் அவரிடத்தில் இருந்தன. நகரத்தில் வாழும்படி அவர் தகுதிப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார். அவர் பாவத்தின் சிற்றின்பங்களால் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் நற்பண்புகளுடன் இருக்க விரும்பும்போது வரக்கூடிய கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டார். அவர் திக்குவாயனாக இருந்தாலும், தேவனோடு பேசினார். அவர் ஒரு மேய்ப்பனின் கோலை வைத்திருந்தார். ஆனால் முடிவில்லாத தேவனுக்குரிய வல்லமையை அவர் கொண்டிருந்தார். அவர் பார்வோனிடத்திலிருந்து ஓடி வந்த ஒரு நாடோடியாக இருந்தார். ஆனால் அவர் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதுவராக இருந்தார். அவர் பிரமாணங்களைக் கொடுத்தவராகவும், கிருபைக்கு முன்னோடியாகவும் இருந்தார். மோவாப் மலையில் அவர் தனிமையாக மரித்தார்.

அவருடைய அடக்க வேளையில் அங்கு யாரும் இல்லை. ஆனால் தேவன் அவரை அடக்கம் செய்தார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE