மனித விளக்கு

இந்த உலகமுழுவதுக்கும் வெளிச்சம் தரக்கூடியது என்றால் அந்த விளக்கு எவ்வளவு பெரிதாய் இருக்க வேண்டும். ஒரு விளக்கு போதாது. ஏனெனில் இந்த சூரியனே ஒரு பாதிக்கு மட்டுமே வெளிச்சம் கொடுக்கிறபோது உலகம் முழுவதுக்கும் வெளிச்சம் கொடுக்க வேண்டுமானால் எவ்வளவு பெரிய விளக்கு வேண்டும்!.

இந்த உலகம் முழுவதும் விளக்குகள் அங்கங்கே ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் தான் அந்த விளக்குகள்! உலகத்தின் எல்லா கோடிகளிலும் இந்த விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பட்டணத்தில் நான் தான் “விளக்கு”. அடுத்த பட்டணத்தில் நமது சகோதரன் “விளக்கு”. இப்படி நாம் ஒவ்வொருவருடைய நடை, உடை, பாவனைகள், பேச்சுக்கள், செயல்கள், கிரியைகள், எல்லாம் எரிந்து பிரகாசிக்கிற விளக்காக இருக்க வேண்டும். விளக்கு எரிகிறது என்றால், மெழுகுவர்த்தி எரிகிறது என்றால், அது தன்னைத்தான் தியாகம் செய்கிறது. நாமும் அது போலவே நம்மை வெறுத்து தியாகம் செய்ய வேண்டும். அப்போதுதான் வெளிச்சம் கிடைக்கும்.

நாம் மற்றவர்களுக்கு உதவி புரிவதிலேயே கண்நோக்கமாயிருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி பேசும்போது நல்லதையே பேச வேண்டும். மற்றவர்களோடு கூடிப்பழகும் போது, “வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் கிறிஸ்துவை நாம் காட்ட வேண்டும்.” தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும். நம்மை பகைக்கிறவர்களை நாம் நேசிக்க வேண்டும்!. நம்மைப்போல் உள்ளவர்களையே நேசிப்பதை விட்டுவிட்டு, ஏழ்மையான நிலையிலுள்ள, ஒரு ஆதரவும் இல்லாத மக்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தேவையை சந்திக்க வேண்டும். இப்படிச் செய்வோமானால் நம்முடைய வெளிச்சம் இந்த உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கும். நம் வாழ்க்கையிலே பிறர் தேவனுடைய அன்பையும், சுவிசேஷத்தின் வல்லமையையும் கண்டு கொள்வார்கள். அதுவே தேவனுக்கு மகிமையாகும்.

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. மத்தேயு 5:14

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE