அரசாங்கத்தின் அகல் விளக்கு

ஹசரத் என்பவர் ஆன்மீக வாழ்க்கையில் பெரிதும் ஈடுபாடுள்ள ஒரு அரசு ஊழியர். அவர் ஒரு நாள் இரவு தன்னுடைய அரசு கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்குப் பணக்காரர் ஒருவர் வந்திருந்தார். வந்தவர் தன்னுடைய சொந்த வேலைக் காரணமாகவே வந்திருக்கிறார் என்பது ஹசரத்துக்குத் தெரிந்தது. உடனே ஹசரத் தாம் உபயோகித்துக் கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு அதே இடத்தில் வேறு ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். ஹசரத்தின் இந்த செயல் அந்தப் பணக்காரருக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்கிற்று, இருந்தாலும். அவர் தன்னுடைய ஆவலை அடக்கிக் கொண்டு, ஹசரத்திடம் தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினர். உடனே ஹசரத் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு, முதலில் எரிந்து கொண்டிருந்த விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அந்தப் பணக்காரர் தனது ஆவலை மேலும் அடக்கமுடியாமல்,ஹசரத்திடம் அவரது செயலுக்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு “ஐயா, தாங்கள் வந்தபோது நான் அரசு அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அதற்காக அரசுகொடுத்த விளக்கை உபயோகித்தேன். உங்களுடன் சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசும்பொழுது அரசுப் பணத்தைச் செலவழிக்கலாமா? அதனால் தான் உங்களுடன் பேசும்பொழுது என்னுடைய சொந்த விளக்கை உபயோகித்தேன் என்று பதில் கூறினார்.

நண்பர்களே! இந்நாட்களில் ஊழியக்காரர்கள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் யாவரும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்களாக இருந்தால், சபையும், பள்ளிகளும், தேசமும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும். நாம் எப்படி வாழ்க்கை நடத்துகிறோம் என்பதைக் குறித்து ஒருநாள் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்து வாழ வேண்டும். கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் என்றாவது ஒருநாள் அநேகத்தின்மேல் அதிகாரி ஆவான் என்பது உண்மை. உங்கள் வாழ்க்கையில் எத்தகைய உண்மையுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE