கர்த்தாவே என்று சொல்லுகிறவன்!

ஒரு முறை ஒரு போதகர் அந்த பட்டணத்திலுள்ள சோப்பு தாயாரிக்கும் தொழிற் சாலைக்கு சென்றிருந்தார். அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் கடவுள் மேல் அதிக நம்பிக்கையில்லாதவர். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் சோப்பு தயாரிப்பவர் போதகரை பார்த்து “நண்பரே, நீங்கள் பிரசங்கிக்கிற பிரசங்கம் மற்றவர்களுக்கு அதிக பயன் தராமல் இருக்கிறதே. உலகில் இன்னும் அதிக பாவமும் பாவிகளும் நிறைந்து காணப்படுகிறார்களே” என்று கூறினார். சில நிமிடங்கள் கழித்து, வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சில குழந்தைகளை போதகர் பார்த்தார். அவர்களுடைய ஆடைகள் மிகவும் அழுக்கடைத்து காணப்பட்டது போதகர் அவரைப் பார்த்து. “உங்களுடைய சோப்பு உலகிலே மக்களுக்கு அதிகமானது ஒன்றும் செய்ததாக தெரியவில்லையே; மிகுதியான அழுக்கும், அழுக்கடைந்த ஜனங்களும் இருக்கிறார்களே” என கேட்டார்.

அதற்கு அந்த சோப்பு தயாரிப்பவர், “அப்படியில்லை; சோப்பு அதன் வேலையை நன்றாகச் செய்கிறது. ஆனால் அதனை மக்கள் உபயோக்கி வேண்டும்” என வலியுறுத்தினார். அதைக் கேட்ட போதகரும், “நற்செய்தியும் அவ்வாறேதான். ஜனங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இதனை முயற்சிக்க வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். அநேகர் நடப்பது இல்லை. அதனால்தான் பாவம் இன்னும் காணப்படுகிறது” என பதிலுரைத்தார்.

எதனை கேட்கிறோமோ, அதன்படி நாம் நடக்க வேண்டும். ஆண்டவரின் விருப்பமும் அதுதான், அநேகருடைய வாழ்க்கையில் சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக உள்ளது. இது முற்றிலுமாக மாறவேண்டும். ஆகவே இன்று நீ அறிந்த எல்லாவற்றின் படியும் நடந்து காட்டுகிறயா! அதுதான் மிகவும் முக்கியம், சுவிசேஷம் இன்னும் உங்கள் வாழ்க்கையில் தன் கிரியயைச் செய்யாமல் இருக்கிறதா? சுவிசேஷம் பெலவீனமடையவில்லை; நீங்கள் அதற்கு ஒப்புக் கொடுக்கவில்லை.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்” மத்தேயு 7:21

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE