என் அம்மா 4 மணிக்கு ஜெபம் செய்வார்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அமெரிக்க நாட்டு வீரர்கள் குறிப்பிட்ட அந்தப்பகுதியை கைப்பற்றி விட்டார்கள் என்றாலும். அந்தப்பகுதி அமெரிக்காவுக்குத் தான் சொந்தம் என்று நிரூபிக்க அந்தப்பகுதியின் உயர்ந்த குன்றின்மேல் அமெரிக்க நாட்டின் கொடியினைப் பறக்க விட வேண்டும் என்கின்ற உறுதியோடு படைத்தலைவன் இருந்தான். தன்னுடைய வீரன் ஒருவனிடம் அமெரிக்கக் கொடியினைக் கொடுத்து குன்றின் உச்சிக்கு அனுப்பி வைத்தான். ஆனால் கொடியோடு சென்ற அந்த வீரனை எதிரிகள் சுட்டித் தள்ளிவிட்டார்கள். இரண்டாவது ஒருவனை கொடியுடன் அனுப்பி வைத்தான் அந்தத்தலைவன். அவனையும் எதிரிகள் சுட்டு வீழ்த்தினர். மூன்றாவதாக ஒருவனை அனுப்பினான். அவனும் எதிரிகளுடைய துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானான்.

படைத்தலைவன் மிகுந்த துயரத்தோடு, என் வீரர்கள் மூவரை நான் இழந்து விட்டேனே, இனி யாரை நான் அனுப்ப முடியும்? பொழுது சாய்வதற்குள் வெற்றி பெற்றோம் என்று தலைமையிடத்துக்கு தகவல் கொடுத்தாக வேண்டுமே, தகவல் கொடுக்கவேண்டுமேயானால், கொடி குன்றின் மேல் பறந்தாக வேண்டுமே என்று குழம்பிக்கொண்டிருந்த போது வீரனொருவன் தலைவனிடம் வந்து நான் அந்த கொடியைக் குன்றின்மேல் ஏற்றி வருகிறேன். ஆனால் சிலமணிநேரம் அவகாசம் வேண்டும். மாலை 4 மணிக்குச் சரியாக நான் குன்றின் மேல் கொடியை ஏற்றிவிட்டு வருவேன் என்றான்.

தலைவனும் அதற்கு சம்மதித்தான். ஆனால் அந்தத் தலைவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் 4 மணி என்கிறான். குழம்பிப்போன தலைவனிடமிருந்து சரியாக மாலை 4 மணிக்கு வீரன் கொடியினைப் பெற்று. குன்றை நோக்கிப் போகிறான். பலத்த காற்று வீசுகிறது. எதிரிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடுகிறார்கள். காற்றின் இரைச்சல், துப்பாக்கிக் குண்டுகளின் முழக்கம் இவைகளுக்கு நடுவே வீரன் குன்றின் உச்சிக்கு கொடியுடன் நடந்து போகிறான். அனைத்து துப்பாக்கிக் குண்டுகளும் திசைமாறிப்போகிறது. அந்தப் பட்டாளத்து வீரன் அமெரிக்க கொடியினை அழகாக அந்தக் குன்றிலே நட்டுவிட்டு, அதற்கு முன்னால் நின்று கெம்பீரமாக, ஒரு சல்யூட் அடித்துவிட்டு கச்சிதமாக இறங்கித் தலைவனிடம் வருகிறான். அவனைக் கட்டித் தழுவிய தலைவன் கேட்கிறான். ஏனப்பா இந்த காரியத்தைச் செய்ய, நீ மாலை 4 மணியைத் தேர்வு செய்தாய்.

அப்போது அந்தப் பட்டாளத்து வீரன் தன் தலைவனிடம் கூறிகிறான். ஐயா நான் பட்டாளத்துக்கு தேர்வு பெற்று. என் வீட்டைவிட்டு வரும்போது என்னை பெற்ற என் அன்புத்தாய் கூறினார்கள். மகனே, நீ தைரியமாகப்போ. நான் ஒவ்வொரு நாளும் மாலை நாங்கு மணி முதல் ஐந்து மணி வரையிலும் உனக்காக ஜெபிப்பேன். அந்த ஜெபம் உன்னைக் காப்பதுடன், உன்னை மகாபெரிய சாதனையாளனாக மாற்றும் என்று கூறி அனுப்பினார்கள் என்றான்.

இதை வாசிக்கின்ற அன்புத்தாயே, நீங்கள் பெற்ற பிள்ளை, உங்களைக் குறித்து இப்படிப்பட்ட சாட்சியைக் கூற முடியுமா? கர்த்தரால் கொடுக்கப்பட்ட சுகந்தரங்களாகிய உங்கள் பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் நடத்துங்கள். அவர்களுடைய இரட்சிப்பு, பாதுகாப்பு, எதிர்காலம், ஆசீர்வாதங்களுக்காக தினமும் தவறாமல், மன்றாடி ஜெபியுங்கள். இதுவே நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய, அதே நேரத்தில் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவியாகும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE