நேரமில்லை…நேரமில்லை

ஆனந்தன் என்பவனுக்கு  தன்னுடைய மரம் வெட்டும் தொழில் திடீரென்று  சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டதால் ஆர்டர் நிரைய வந்தது. அந்த சந்தோஷத்தில்
தனது கோடாரியை எடுத்துக்கொண்டு  மரங்களை வெட்ட ஆரம்பித்தான். வந்த ஆர்டரை அன்றைய தினம் முடிக்க வேண்டும், ஆகையால் மரம் வெட்டும் வேலையை  பல மணி நேரங்கள் தொடர்ந்து செய்தான்.  மிகவும் களைத்துப் போனான். அவ்வழியாய் வந்த ஆனந்தனின் நண்பன் அவனைக் கண்டு  ஆனந்தா! தொடர்ந்து மரம் வெட்டிக்கொண்டு இருக்கிறாயே.  உன்னுடைய கோடாரியைப் பார். அது மிகவும் மழுங்கி மொட்டையாய் இருக்கிறது. கொஞ்சம் கூர்மையாக்கிய பின்பு உன்னுடைய வேலையை செய். அது மிகவும் எளிதாக முடியுமல்லவா? என்று ஒரு யோசனையைக் கொடுத்தான். அதற்கு ஆனந்தன் சொன்ன பதில் என்னவென்று தெரியுமா? எனக்கு கோடாரியைக் கூர்மையாக்க நேரமில்லை என்று சலித்துக்கொண்டு கூறினான்.
   ஆம். நண்பர்களே, இன்று நாமும் இந்த ஆனந்தனைப் போலவே உலகக்காரியங்களில் ஜெயம் கிடைக்க வேண்டும் என்று ஆவிக்குரிய காரியங்களை மொட்டையாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் தேவன் கிருபையாய் கொடுத்த 24 மணி நேரத்தையும் உலகக்காரியத்துக்காக வீணாக்காமல் தேவனுடைய சமூகத்தில் நேரத்தை செலவழித்து உங்கள் வாழ்க்கையைக் கூர்மையாக்கிக் கொண்டு உலகத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஜெயம் பெறுவோம்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE