இடறல்

ஒரு போதகர் வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக , மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார் . விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண் , எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.

இப்போது போதகரின் முறை வந்தது. அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். பணிப் பெண் , ” ஐயா , எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது . ஏற்றுக் கொள்ளுங்கள் ” என்றார்.

போதகர் , ” அம்மா , உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் ” என்றார். பணிப்பெண் விடவில்லை. ” உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் ” என்றார். அப்போதும் போதகர் ஏற்றுக் கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார் ,

“இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன் . போதகர் சொன்னார் , “அம்மா , நான் ஒரு கிறிஸ்தவன். மதுவெல்லாம் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள் . இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள் “. அவர் அப்படிச் சொன்னதும் பணிப் பெண் ஆடிப்போனார்.

” ஐயோ , பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும் ? இதை அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே .இத்தனை உயிர்கள் பறிபோகுமே ” என்று பதறினார். போதகர் சொன்னார் ,

“சகோதரி , கிறிஸ்தவ வாழ்க்கையும் இப்படிப் பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும் . நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிற பல ஆத்துமாக்களுக்கு அது இடறல் உண்டாக்கும் . எனவே புத்தி தடுமாறாது இருக்கும்படி நாங்களும் எப்போதும் விழிப்புடன் இருக்க , இது போன்ற பாவச் செயல்களைத் தவிர்த்துவிடுகிறோம் ” என்றார் . பணிப் பெண் பேசாமல் நகர்ந்து போனார் .

நம்முடைய பரிசுத்த ஜீவியத்தைக் குலைக்கிற எந்தக் காரியத்தில் இருந்தும் விலகி இருக்கும்படி எப்போதும் விழிப்புடன் இருப்பாயா ?

“உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு, நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் ” .மத்தேயு 18 :8

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE