கையை பிடிக்கும் காணிக்கை.

ஒரு நாள் ஒரு மனிதன் தன் சபைப் போதகரைச் சந்திக்க வந்தான். தனக்கு ஒரு முக்கியமானப் பிரச்சனை இருப்பதாகவும், போதகருடைய உதவி தேவைப்படுவதாகவும் கூறினான். “ஐயா, ‘நான் ஆரம்பத்தில் ஏழையாக இருந்தேன். எனக்கு மாதவருமானம் ஐநூறு ரூபாய்தான் இருந்தது. நான் சபையில் சேர்ந்தபின் தசமபாகம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று அறிந்து மாதம் ஐம்பது ரூபாய் உண்மையாக தசமபாகம் கொடுக்க ஆரம்பித்தேன். தேவன் என்னை ஆசீர்வதித்தார். என் வருமானம் நாளுக்கு நான் அதிகரித்தது. இப்போது மாதம் ஆயிரக்கணக்கான ரூபாய் நான் தசமபாகம் கொடுக்கு மளவுக்கு என் வருமானம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஐம்பது ரூபாய் தசமபாகம் கொடுக்கும்போது என் மனதுக்குக் கஷ்டமாக இருந்ததில்லை. இப்போது ஆயிரக்கணக்கான ரூபாய் தசமபாகம் கொடுக்க மனம் இடம் தரவில்லை. நீங்கள் தான் ஒரு வழிசொல்ல வேண்டுமென்றான். உடனே போதகர் முழங்கால் படியிட்டு ” ஆண்டவரே, இந்த சகோதரனுக்கு நீர் கொடுத்துவரும் ஆசீர்வாதங்கள் யாவையும் நிறுத்திவிடும்; அவனுடைய வியாபாரம் நஷ்டமடையட்டும், அவனுடைய வருமானம் மாதம் ஐநூறு ரூபாய் மட்டுமே வரட்டும்; அப்போது மனக்கஷ்டம் இல்லாமல் அவன் தசமபாகம் கொடுக்க வசதியாக இருக்கும்” என்று ஜெபித்தார். அதைக் கேட்ட அந்த மனிதன், “ஐயோ அப்படி வேண்டாம், தேவனுடைய ஆசீர்வாதங்கள் நிறுத்தப்பட்ட வேண்டாம், நான் அவருக்கு இனிமேல் உண்மையாக இருப்பேன்” என்று கூறிச்சென்றான்.

தேவனிடமிருந்து நன்மையை, ஆசீர்வாதங்களைப் பெறும் நாம் ஏன் அவருக்கு உண்மையாயிருக்கத் தயங்குகிறோம். அவர் பத்தில் ஒன்பது பாகத்தைக் கேட்பதில்லையே. அவருடைய அசீர்வாதம் இல்லாவிட்டால் நம்மிடம் ஐசுவரியும் இல்லாமல் போய்விடுமே. ஆகவே எவ்வளவுக்கு அதிகமாக ஆசீர்வாதங்கள் வருகின்றதோ, அவ்வளவுக்கு அதிகமாக நாம் உண்மையாயிருப்பது அவசியம், கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒருநாளும் நம்மை விட்டு விடுபட்டுப் போகவே கூடாது.

தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது, அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. லேவியாராகமம் 27: 30

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE