நமக்கு ஐயோ..!

D.L மூடி பிரசங்கியார் கன்வென்ஷன் கூட்டங்களில் பேசுவதற்காக ஒரு பட்டணத்திற்குப் போயிருந்தார். முதல் நாள் கூட்டம் முடிந்தபின் தன் ஹோட்டல் அறைக்கு வந்தார். மிகுந்த களைப்பு. அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவரை ஆண்டவர் எழுப்பினார். மூடி நீ உடனே போய் பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மனிதனுக்கு என்னைக் குறித்து சொல் என்றார். மணியைப் பார்த்தார். இரவு 12 மணி ஆண்டவரே எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. காலை எழுந்ததும் முதல் வேலையாக பக்கத்து அறைக்கு செல்ல வெளியே வந்தார். பார்த்தால் போலீஸ் குழுமியிருந்தது. என்னவென்று விசாரித்தார். ஐயா நேற்று இரவு பனிரெண்டு மணியளவில் உங்கள் பக்கத்து அறை மனிதர் தூக்கில் தொங்கி இறந்து போனார் என்று சொன்னார்கள். மூடிக்கு மனம் பதை பதைத்தது.
ஐயோ ஆண்டவர் வார்த்தைக்குக் கீழ்படிந்திருப்போமானால் இந்த ஜீவன் பிழைத்திருக்குமே என்று புலம்பினார். அன்று முதல் பெரும் கூட்டங்களில் பிரசங்கிக்கிற மூடி தனி மனிதனுக்கும் தினமும் சுவிசேஷம் சொல்ல ஆரம்பித்தார்.
அன்பான நண்பர்களே நீங்கள் எத்தனை பேருக்கு உன்னை மீட்ட இயேசு கிறிஸ்துவைக் குறித்து சொல்லியிருக்கிறாய், இயேசு கிறிஸ்துவின் நாமம் இன்றும் பாவத்தில் மரித்துக் கொண்டிருப்போரை உயிரடையச் செய்கிறது. அதனால் சுவிசேஷத்தை சொல்லாதிருப்போமானால் நமக்கு ஐயோ சுவிசேஷம் சொல்லுவது எல்லோர் மேலும் விழுந்த கடமையாயிருக்கிறது.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE