வேதாகமத்தின் கிழிந்த பக்கம்.

ஒரு மளிகை கடைக்காரரிடம் ஒரு வேதப்புத்தகம் கிடைத்தது. அதன் அருமை தெரியாத அவர், அதிலுள்ள பக்கங்களைக் கிழித்துப் பொருட்களைக் கட்டிக் கொடுக்க உபயோகித்து வந்தார்.
        ஒருநாள் அந்த கடைக்கு வந்து ஒரு மனிதன் சில பொருட்களை வாங்கிச் சென்றான். அவன் ஒரு திருடனாய் இருந்தபடியால் அவன் வாழ்க்கையில் சமாதனமில்லாமல், நிம்மதியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் அந்த பொருட்களைக்  கட்டின தாளைப் பிரித்ததும் “இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி. 9:22) என்னும் வசனம் அவன் கண்களைக் கவர்ந்தது. மட்டுமல்ல, அவனுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது.
        தனக்கு பாவமன்னிப்பில்லையே என்று கதறி அழ ஆரம்பித்தான். மறுநாள் காலையில் அதே கடையில் வேறொரு பொருள் வாங்கியதும் அதில் சுற்றப்பட்டிருந்த வேதாகம தாளை ஆவலோடு நோக்கினான். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7-10) என்ற வசனங்களை வாசித்தான்.
      அந்த இனிமையான வசனங்கள் இருளடைந்திருந்த அவன் உள்ளத்தில் பெரிய வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. நம்பிக்கையற்றிருந்த அவன் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்தது. கண்ணீரோடு பாவங்களை அறிக்கையிட்டு. இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டான். கர்த்தருடைய பிள்ளையாக மாறினான்.
   ஆம், வேதாகமத்தின் கிழிந்த பக்கங்கள் மட்டுமல்ல வேதாகமத்தின் ஒரு வசனமாயிருந்தாலும் அதில் தேவனுடைய ஜீவன் இருக்கிறபடியினால் அது ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டை வழிநடத்த வல்லமையுள்ளதாயிருக்கிறது. வேதவசனங்கள் ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை (ஏசா. 55:11).
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE