உபத்திரவத்தில் பொறுமையாய் இருங்கள்

இன்று வரை கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உபத்திரவம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கர்த்தருக்காக உபத்திரவங்களைப் பொறுமையாய் ஏற்றுக் கொள்வோருக்கு தேவன் கொடுக்கும் வெகுமதி மிகவும் பெரிதாக இருக்கும்.

இங்கிலாந்து தேசத்தில் எலிசபெத் ராணி, தேசத்திற்காகப் பாடுகளை ஏற்றுகொண்ட போர் வீரர்களை கவுரவிக்க எண்ணி ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தேசத்திற்காகத் தங்கள் அவயங்களை இழந்த அநேக போர் வீரர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். தேசத்திற்காகத் தன் கைகளையும் கால்களையும் இழந்த
ஒரு போர் வீரனை சிலர் சுமந்து கொண்டு வந்து மேடையில் விட்டபோது, எலிசபத் ராணி எழுந்து வந்து அந்தப் போர் வீரரின் நெற்றிகளில் முத்தமிட்டு அவனைப் பாராட்டி அவனுக்கு விருது வழங்கினார்கள்.

ஆம், நம் அருமை ஆண்டவரும், முதல் இரத்தசாட்சியான ஸ்தேவான் மரித்தபோது, எழுந்து நின்று வரவேற்றதை, அப் 7:56 ல் வாசிக்கிறோம். மேலும் அப் 14:22ல் “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்றும் வாசிக்கிறோம்.

இந்த உலகத்தில் நமக்கு வருபவைகள் யாவும் லேசான உபத்திரவமே. மேலும் இவை சீக்கிரம் நின்றுபோகும். நமது துக்கம் சீக்கிரத்தில் சந்தோஷமாக மாறும்.

வரப்போகும் நித்திய மகிமைக்கு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவ்வுலகப்பாடுகள் யாவும் மிகச் சிறியவையே, நாம் அவரோடு கூட பாடுகள் சகித்தால் அவரோடு கூட பாடுகள் சகித்தால் அவரோடு கூட ஆளுகையும் செய்வோம், அந்த ஆளுகைக்கு நாம் யாவரும் பங்காளிகளாக மாற தேவன் கிருபையாய் நம்மை வழி நடத்த ஆயத்தாமாக இருக்கிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல பாடுகளை சகிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். வரப்போகும் மகிமையை நினைத்து துன்பம் சகிக்க இந்த வாழ்வில் நீங்கள் ஆயத்தமா?

“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன் சங் 119:71

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE