சமாதானம் வேணும் டாக்டர்…

 ஒரு மனிதன் மருத்துவர் ஒருவரிடம் வந்து ஐயா எனக்கு மனதிலே சமதானமேயில்லை. அதற்கு ஏதாவது ஒரு மருந்து கொடுங்கள் என்று கேட்டான். அதற்கு மருத்துவர் “என்னிடம் உடல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மாத்திரமே மருந்து உண்டு. ஆனால் நீ கேட்கும் வியாதிக்கு என்னிடம் மருந்து கிடையாது என்று கூறிவிட்டார். மேலும் அந்த மனிதன்,  “நான் என்ன செய்யவேண்டும்” ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டான்.
        அதற்கு டாக்டர் நம்மூரில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அந்த சர்க்கஸிலே பபூன் என்ற வேடிக்கைக்காரன் எல்லோரையும் சிரிக்க வைப்பான். நீ அந்தச் சிரிப்பை இரசித்தால் உனக்கு அந்தச் சமாதனம் வரும் என்று கூறிவிட்டார். அதற்கு அந்த மனிதனே அந்தச் சர்க்கஸில் வரும் பபூன் நான்தான் என்றார். பபூன் அல்ல கிறிஸ்துவே சமதானம் தருபவர்.
……கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.  சங்கீதம் 29:11
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE